சீனக் கம்யூனிஸ்ட் கட்சி "ஓர் ஆழ்ந்த, ஆழ்ந்த அதிகாரத்துவமயமாக்கல் மட்டத்திலான ஓர் அமைப்பு"

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சோசலிச வலைத் தளம் சமீபத்தில் ட்ரொட்ஸ்கிசத்தின் மீது ஆர்வம் கொண்ட சீனாவிலுள்ள ஓர் இளைஞருடன் கலந்துரையாடியது. அவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) உள்ளூர் கிளையின் ஓர் உறுப்பினராகவும் உள்ளார். அவர் CCP இன் ஓர் உறுப்பினராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதைக் குறித்தும், அதாவது கட்சிக்குள் நடக்கும் அரசியல் விவாதத்தின் தன்மைதான் அவரை லியோன் ட்ரொட்ஸ்கியின் படைப்புகளை வாசிக்கவும் சீனாவில் சோசலிசத்திற்கான போராட்டத்தில் அவரின் கண்ணோட்டங்களைத் தெரிவிக்கவும் அவரை ஈர்த்திருந்தது என்ற நிலையில், அவை குறித்து WSWS உடன் உரையாட அவர் உடன்பட்டார். ஒடுக்குமுறையான சீன ஆட்சி முன்னிறுத்தும் அபாயங்கள் காரணமாக, ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் WSWS தேசிய ஆசிரியர் பீட்டர் சைமண்ட்ஸ் உடனான இந்த பேட்டியில் அவரின் உண்மையான பெயரும் விபரங்களும் வெளியிடப்படவில்லை.

பீட்டர் சைமண்ட்ஸ்: இந்த கலந்துரையாடலுக்கு உடன்பட்டமைக்கு நன்றி. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 91 மில்லியன் சீன உறுப்பினர்களில் ஒருவரான நீங்கள் உள்ளூர் வேலையிட மட்டத்தில் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளீர்கள், என்றாலும், உங்கள் அனுபவங்கள், திட்டமிட்டு மறைக்கப்படும் அக்கட்சியின் உள் அரசியல் வாழ்வின் தன்மை மீது சிறிது வெளிச்சமிடுகின்றன. நீங்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் எப்போது மற்றும் ஏன் இணைந்தீர்கள் என்ற கேள்வியோடு நான் தொடங்க விரும்புகிறேன்?

ஃபூ ஹாங் (Fu Hong): நான் கல்லூரியில் இருந்த போதே சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துவிட்டேன், பெரும்பாலும் ஏனென்றால் அது என் எதிர்கால தொழில் வாழ்க்கை வளர்ச்சிக்கு உதவும் என்பதற்காக தான். என் நண்பர்கள் ஏன் அக்கட்சியில் இணைந்தார்கள் என்று நான் ஒருபோதும் அவர்களிடம் விசாரித்ததில்லை, ஆனால் அவர்கள் என்ன காரணத்திற்காக இணைந்தார்கள் என்பதை என்னால் ஊகிக்க முடியும். பெரும்பாலானவர்களின் விடயங்களில், அவர்கள் சடரீதியிலான நலன்களுக்காகவே அக்கட்சியில் இணைகிறார்கள். நீங்கள் அரசுக்குள் பணியாற்றுகிறீர்கள் என்றால், கட்சியில் இணைந்திருக்கிறீர்களா இல்லையா என்பது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால் நீங்கள் கட்சி உறுப்பினர் என்றால், நீங்கள் உயர் பதவிகளுக்கு உயர்த்தப்படலாம். நீங்கள் கட்சியில் இணைய மறுத்தால், உங்களுக்கு உயர்பதவி கிடைக்காது.

PS: சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓர் உறுப்பினராக, நீங்கள் என்ன மாதிரியான நடவடிக்கைகளில் பங்கெடுக்கிறீர்கள்? கூட்டங்களிலா? மாநாடுகளிலா? சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓர் உறுப்பினராக அது என்ன அர்த்தப்படுத்துகிறது?

FH: பெரும்பாலும் வேலையிட கூட்டங்களில் பங்கெடுப்பது. ஆனால் இந்த கூட்டங்களில் பெரும்பாலும் நீங்கள் வெறுமனே கேட்டுக் கொண்டிருக்க தான் முடியும். அங்கே வேறெந்த நடவடிக்கைகளும் இருக்காது. இந்த கூட்டங்களில், பெரும்பாலான நேரங்களில் தலைவர்கள் மட்டுமே பேசுவார்கள். அவர்கள் சிறியளவில் கட்சியின் அரசியல் மைய தொனியையும் மற்றும் மற்ற தலைவர்களின் அறிவுறுத்தல்களையும் எங்களுக்கு வழங்குவார்கள். அங்கே பங்கெடுத்திருப்பவர்கள் மத்தியில் கலந்துரையாடல்கள் நடக்காது. இது மாதிரியான கேள்விகள் எல்லாம் விவாதிக்கப்படாது. யாரும் இதுவரையில் எந்தவொரு கேள்வியும் எழுப்பியதில்லை. நாங்கள் ஒருபோதும் அரசியல் பிரச்சினைகளை கலந்துரையாடுவதில்லை.

PS: அக்கூட்டங்களில் பேசும் அதிகாரிகள் என்ன பதவியில் இருக்கிறார்கள்? அவர் மாகாண அளவிலான தலைவரா? உள்ளூர் தலைவரா? உங்கள் வேலையிடத்தின் தலைவரா? அவர்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா?

FH: நான் என் வேலையிடத்தில் பேசிய தலைவர்களின் பேச்சுக்களை மட்டுமே கேட்டுள்ளேன். தேர்தல்கள் நடக்கும், ஆனால் பெரும்பாலான தலைவர்கள் வாக்கெடுப்பின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அவர்கள் பெரும்பாலும் உயர் அதிகாரிகளால் முன்னுக்குக் கொண்டு வரப்படுகின்றனர். ஆனால் நிச்சயமாக, அவ்வாறு முன்னுக்குக் கொண்டு வருவதற்கு முன்னதாக, அந்த நியமனம் குறித்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பொதுக்கருத்து திரட்டப்படும். அடிப்படையில், அந்த தலைவர்கள் உயரதிகாரிகளால் முன்னுக்குக் கொண்டு வரப்படுகிறார்கள், தேர்தல்கள் வெறுமனே சம்பிரதாயத்திற்காக மட்டுமே நடத்தப்படுகின்றன.

PS: இதை நான் மிகவும் அதிகாரத்துவமயமான அமைப்பாக குணாம்சப்படுத்துவேன். அதற்கு நீங்கள் எவ்வாறு விடையிறுப்பீர்கள்?

FH: அது இன்றியமையா விதத்தில் ஆழமாக, ஆழமாக அதிகாரத்துவமயமாக்கப்பட்ட மட்டத்துடன் கூடிய ஓர் அமைப்பு என்றே நினைக்கிறேன். முதலில், அதிகாரத்துவம் வெறுமனே இன்று உருவெடுத்ததல்ல. அது குறைந்தபட்சம் சுமார் மாவோ காலத்திலிருந்தே இருந்தன. சரியாக சீன மக்கள் குடியரசு ஸ்தாபித்ததற்குப் பிந்தைய காலகட்டத்தில், அதிகாரத்துவம் மற்றும் ஊழல் போன்ற விடயங்களை நீக்குவது குறித்து மாவோ பல கட்டுரைகளை எழுதினார். ஆனாலும் அதிகாரத்துவம் இன்று வரையில் இருக்கிறது.

PS: அது ஏனென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

FH: 1952 இல் இந்நாடு ஸ்தாபிக்கப்பட்டதற்குப் பின்னர், மக்கள்-விரோத சிந்தனைகளில் இருந்தும், கோமின்டாங்கின் சில மிச்சமீதி பாதிப்புகள் உட்பட கடந்த காலத்தின் பிற்போக்குத்தனமான வர்க்க மனோபாவங்களில் இருந்தும் அதிகாரத்துவம் உருவெடுப்பதாக மாவோ கருதினார். இதுதான் அதிகாரத்துவத்தின் தோற்றுவாய் என்று மாவோ கருதினார். ஆனால் அதிகாரத்துவம் இன்று முற்றிலும் புதிய சமூக அடித்தளத்தை, தனியார் சொத்துடைமையைக் கொண்டுள்ளது. புதிதாக உதித்தெழுந்த முதலாளித்துவ வர்க்கம் பலமான இன்னும் பலமாக வளர்ந்து வருகிறது, அதேவேளையில் வர்க்க விரோதமும் கூட கூர்மையாக அதிகரித்து வருகிறது.

PS: புரட்சிக்குப் பின்னர் சீனாவில், அதிகாரத்துவம் உருவெடுத்தமை செம்படையில் அதன் தோற்றுவாய்களைக் கொண்டிருந்ததுடன், அது தொழிலாள வர்க்கத்திற்கும், தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு இயக்கத்திற்கும் விரோதமாக இருந்தது. அதிகாரத்துவம் தனியந்தஸ்து கொண்ட அதிகாரத்துவமாக எழுந்து, அதன் நலன்களைப் பாதுகாத்ததுடன், தொழிலாளர்களின் ஈடுபாட்டை மட்டுமல்ல மிகவும் பரந்த விதத்தில் விவசாய ஜனங்களின் ஈடுபாட்டையும் திணறடித்தது. சீனாவில் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்டமை நிச்சயமாக சமூக பதட்டத்தையும் சமூக எதிர்விரோதத்தையும் தீவிரப்படுத்தி உள்ளது என்பதில் நான் உடன்படுகிறேன், ஆனால் அதிகாரத்துவமே எப்போதும் தொழிலாள வர்க்கம் மற்றும் பெருந்திரளான மக்கள் மீதேறி உட்கார்ந்துள்ளது.

FH: தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்த வரையில் முன்னதாக, தேசிய சொத்துறவுகளை அடிப்படையாக கொண்டிருந்த அதிகாரத்துவம் இதிலிருந்து தனிச்சலுகைகளைப் பெற்றது. ஆனால் சொத்துறவுகள் மாறியதும், தனிச்சொத்துறவுகளின் கீழ் அவர்களின் தனிச்சலுகைகளை அவர்கள் பேண விரும்பினால், அதிகாரத்துவமயமாக்கலின் அளவை ஆழப்படுத்தப்பட வேண்டியிருக்கும்.

Le président Xi Jinping dans le Grand Hall du peuple à Pékin en mars 2018. (Crédit: Xinhua)

PS: ஜனாதிபதி ஜி இன் கீழ் விடயங்கள் மாறியிருப்பதாக நினைக்கிறீர்களா? மக்கள் அவர்களின் கருத்துக்களைக் குறைவாகவே முன்வைக்க முடிகிறது என்று நினைக்கிறீர்களா? அரசியல் விவாதங்களுக்கு இடம் குறைவாக இருக்கிறதா?

FH: முதலாவதாக, சொல்லப்போனால் பேச்சு சுதந்திரம் மீதான கட்டுப்பாடு இறுக்கப்பட்டுள்ளது. அரசியல் விவாதங்களைப் பொறுத்த வரையில், இதற்கு முன்னர் அது என்ன மாதிரி இருந்ததென எனக்கு தெரியவில்லை, ஆனால் இப்போது முக்கிய தேசிய கொள்கைகள் இன்னமும் ஒரு சில தலைவர்களாலேயே கலந்துரையாடப்பட்டு முடிவெடுக்கப்படுகின்றன. இத்தகைய விடயங்களில் சாமானிய மக்களின் அரசியல் கருத்தும் இருப்பதில்லை. மேலும் இதில் சாதாரண கட்சி உறுப்பினர்களும் உள்ளடங்குவர்.

PS: ஜனாதிபதி ஜி நியமிக்கப்பட்டதைக் குறித்தும், ஜனாதிபதியும் துணை ஜனாதிபதியும் இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்கலாம் என்பதை இப்போது அவர் நீக்கி இருப்பதைக் குறித்தும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

FH: ஜி ஐ பொறுத்த வரையில், பதவிகாலத்தின் வரம்புகளை நீக்குவதற்கான முடிவு என்பது ஏதோவிதத்தில் நிர்பந்தமாக இருந்ததென நான் நினைக்கிறேன். அதாவது, அவரால் வேறுவிதமாக முடிவெடுக்க முடியாது என்று கூறலாம். பொதுவாக கூறுவதானால், இந்த முடிவானது நாட்டிற்குள்ளேயும் நாட்டிற்கு வெளியேயும் இரண்டிலும் நிலவும் கூர்மையான எல்லா மோதல்களின் விளைவாக இருந்தது. அவர் இந்த நகர்வை எடுக்க வேண்டியிருந்தது. ஆகவே இது அவரின் தனிப்பட்ட அதிகார வேட்கையின் விளைவல்ல, மாறாக தற்போதைய புறநிலை நிலைமையின் கீழ் அவர் அதை செய்ய வேண்டியிருந்தது. தற்போதைய இந்த அமைப்புமுறை அதன் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவும் ஓர் அறிகுறியாக இருக்கக்கூடும்.

PS: நான் மிகவும் உடன்படுகிறேன். குறிப்பாக மேற்கத்திய ஊடகங்களில், ஜி முழு அதிகாரமுள்ள நபராக சித்தரிக்கப்படுகிறார் என்றாலும், கட்சி ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளதுடன் சமூகமோ அதீத சமூக பதட்டங்களால் அலைக்கழிக்கப்பட்டு வருகிறது. உலக சோசலிச வலைத் தளத்தில் நாம் குணாம்சப்படுத்தியதைப் போல, ஜி ஒரு போனபார்ட்டிச நபராக செயல்பட்டு, கட்சிக்குள் வெவ்வேறு கன்னைகளைச் சமநிலைப்படுத்த முயன்று வருகிறார். கட்சியே கூட வெவ்வேறு வர்க்க சக்திகளுக்கு இடையே சமநிலைப்படுத்த முயன்று வருகிறது.

FH: நான் உடன்படுகிறேன்.

PS: முதலில் ஜி ஜனாதிபதியாக வந்தபோது, அவர் மிகப்பெரியளவில் ஊழல்-தடுப்பு முன்முயற்சிகளைத் தொடங்கினார், அது குறிப்பிட்டளவிற்கு மக்களிடையே வரவேற்பு பெற்றிருந்தது ஏனென்றால் ஊழல் என்பது அதிகாரத்துவத்தின் எல்லா மட்டங்களிலும் சர்வசாதாரணமாக வியாபித்திருந்தது. அவர் ஊழல்-தடுப்பு முனைவை அவர் போட்டியாளர்களுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறார். அவர் பதவியேற்பதற்கு முன்னர் கூட, முக்கிய போட்டியாளரான பொ ஜிலாய் க்கு (Bo Xilai) எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவர் ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த ஊழல்-தடுப்பு முனைவைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

FH: இந்த ஊழல்-தடுப்பு முனைவு எந்த வர்க்கத்திற்கு சேவையாற்றுகிறது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். சாராம்சத்தில், இந்த ஊழல்-தடுப்பு முனைவு முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்குச் சேவையாற்றுகிறது. ஊழல் அதுவே முதலாளித்துவ வர்க்கத்திற்குள் நிறைய மனக்குறைகளைத் தோற்றுவித்துள்ளது. அதிகாரத்துவத்திற்குள் ஊழல் இருப்பதன் காரணமாக, நிர்வாக நிகழ்ச்சிப்போக்குகளை ஒழுங்கு செய்ய முதலாளித்துவவாதிகள் கூடுதல் முயற்சி செய்ய வேண்டியுள்ளது. அடிப்படையில் இதனால் தான், ஊழல்-தடுப்பு முறை முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்குச் சேவையாற்றுகிறது மற்றும் முதலாளித்துவத்தின் கீழ் தனிச்சொத்துடைமை உறவுகளைப் பாதுகாக்கிறது.

ஊழல் அதுவே சில அதிகாரத்துவவாதிகளுக்கும் முதலாளித்துவவாதிகளுக்கும் இடையே உறவுகளை உண்டாக்க உதவுகிறது என்பது மற்றொரு புள்ளி, அது [ஜி க்கு] ஓர் அரசியல் அச்சுறுத்தலைக் கொண்டிருக்கிறது. இதனால், அத்தகைய அரசியல் அச்சுறுத்தல்களை நீக்குவதே அவரின் ஊழல்-தடுப்பு முனைவின் மற்றொரு நோக்கமாக உள்ளது. ஊழல் அதிகாரத்துவத்திற்குள் உள்-முரண்பாடுகளையும் தீவிரப்படுத்துகிறது.

ஒருபுறம், நிச்சயமாக, பெருந்திரளான மக்கள் ஊழலால் அதிருப்தி கொண்டுள்ளனர். ஆனால் ஊழல்-தடுப்பு முனைவுக்கு இரண்டு பிரதான நோக்கங்கள் உள்ளன: ஒன்று, முதலாளித்துவ வர்க்கத்தின் மனக்குறைகளைத் தீர்ப்பது; இரண்டாவது, கட்சிக்குள் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் அதிகாரத்துவவாதிகளுக்கும் இடையிலான உறவுக்குச் சேவையாற்றுவது. அதுபோன்ற உறவுகள் முதலாளித்துவ வர்க்கத்தையும் அவர்களின் தனிச்சொத்துடைமை உறவுகளையும் பாதுகாக்கவே ஏற்படுத்தப்படுகின்றன.

PS: நீங்கள் கூறுவதில் இருந்து, அங்கே மிகக் குறைவான அரசியல் விவாதமே உள்ளது, அதுவும் குறைந்தபட்சம் CCP க்குள் வேலையிட மட்டத்தில் தான் உள்ளது. நீங்கள் கட்சியில் இருந்த ஆண்டுகளில், யாரும் கேள்வி எழுப்பி இருக்கவில்லை அல்லது அந்த வேலையிட கூட்டங்களில் இதையொரு புள்ளியாக குறிப்பிட்டிருக்கவில்லை. ஆகவே கட்சிக்கு வெளியே, மக்கள் அரசியலை எவ்வாறு பார்க்கிறார்கள்? அவர்கள் தனிப்பட்டரீதியில் அவர்களின் கருத்துக்களைக் கூறுவார்களா? அல்லது அரசியல் விவாதங்களுக்கான வேறு வழிகள் உள்ளதா? அரசு மீதான விமர்சனங்களை மக்கள் உங்களிடம் கூறியதுண்டா அல்லது யாரிடமாவது கூறியதாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

FH: பொதுவாக கூறுவதானால், பெரும்பாலானவர்கள் இதுவரையில் அரசியல் விழிப்புணர்வுக்குள் சென்றதில்லை. சீனாவில், உண்மையில், உங்களுக்கு எந்தவொரு அரசியல் கல்வியும் அரிதாகவே கிடைக்கும். மக்களுக்கு இதுவரையில் எவ்வாறு கலந்துரையாடுவது, அரசியல் நிகழ்வுப்போக்கை எவ்வாறு விவரிப்பதென்று கூட தெரியாமல் இருக்கலாம். நாட்டுக்குள்ளேயும் சரி நாட்டுக்கு வெளியேயும் சரி அரசியல் பிரச்சினைகளை அவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். பரந்துபட்ட மக்களின் அடுக்குகளிடையே தற்போதைய நிலைமை மீது அங்கே அதிருப்தி உள்ளது, ஆனால் அதை எவ்வாறு விளங்கப்படுத்துவதென அவர்களுக்குத் தெரியாது.

கடந்த சில தசாப்தங்களாக, சந்தை பொருளாதாரமாக சீனா மாறியதில் இருந்து, பொருளாதார அபிவிருத்தியில் ஒருங்குவிந்திருக்க வேண்டும் என்பதே உத்தியோகபூர்வ போக்காக உள்ளது என்பது மற்றொரு புள்ளி. இவ்விதத்தில் மக்களின் கவனம் சடரீதியிலான நலன்களைப் [பின்தொடர்வதை] நோக்கியும், எப்படி பணம் சம்பாதிப்பது என்பதை நோக்கியும் திருப்பி விடப்பட்டுள்ளது. மக்கள், சமூகத்தை அரசியல் வில்லையின் (lens) வழியாக புரிந்துகொள்ள தொடங்கவில்லை. இருப்பினும், பொருளாதாரம் வீழ்ச்சியுறும் போது, மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு மிகவும் வேகமாக உண்டாகும், அவர்கள் அரசியல் கேள்விகளில் ஆர்வம் காட்ட தொடங்குவார்கள் என்று நினைக்கிறேன்.

PS: நீங்கள் ஒரு விதிவிலக்காக இருக்கிறீர்கள், ஏனென்றால் நீங்கள் ட்ரொட்ஸ்கி மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தில் ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள். எப்போது ஏன் உங்களுக்கு லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் அவர் எழுத்துக்கள் மீது ஆர்வம் ஏற்பட்டதென்று விளக்க முடியுமா?

FH: 1925-1927 சீனப் புரட்சியின் தோல்வியிலிருந்து நான் ட்ரொட்ஸ்கியை அறிந்து கொண்டேன். சோவியத் ஒன்றிய வரலாற்றிலிருந்தும் ட்ரொட்ஸ்கி குறித்து அறிந்து கொண்டேன். மேலும், அவரது எழுத்துக்களை நோக்கி வருவதற்கும், இந்த விடயங்களில் ஆர்வம் ஏற்படுவதற்கும் எனக்குள் ஒரு சில குறிப்பிட்ட தற்செயலான குணாம்சமும் உள்ளது, ஆனால் ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு அது தவிர்க்கவியலாததும் கூட. மார்க்சிசம் தோன்றியதிலிருந்தே அது பல்வேறு வெவ்வேறு கன்னைகளையும் போக்குகளையும் அபிவிருத்தி செய்துள்ளதாக நினைக்கிறேன். ஆனால் மார்க்சிசம் ஒரு விஞ்ஞானம் மற்றும் உண்மை என்றால், அங்கே சில தொடர்ச்சிகள் இருந்திருக்க வேண்டும். மார்க்ஸிலிருந்து லெனின், ட்ரொட்ஸ்கி வரையில், ஒரு முறிவில்லாத நூலிழை அவற்றினூடாக ஓடியவாறு அவற்றை இணைக்கின்றன. ஏனைய போக்குகளுடன் ஒப்பிடுகையில், [ட்ரொட்ஸ்கிசம்] இந்த நூலிழையை முற்றிலுமாக உள்ளடக்கி இருந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அது [மார்க்சிசத்தின்] விஞ்ஞானபூர்வ கோட்பாடுகளை உள்ளடக்கி இருந்தது.

இதெல்லாவற்றிலும் லெனின் மற்றும் லெனினிசம் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது. சான்றாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்ஸின் இருநூறாம் பிறந்த தின நினைவாண்டு கொண்டாட்ட ஒரு மாநாட்டிற்கு அழைப்புவிடுத்தது, ஆனால் அவர்கள் லெனின் நினைவுதின கொண்டாட்டத்திற்கான எந்தவொரு நிகழ்வுகளையும் ஒருபோதும் நடத்தியதில்லை. இந்த தொடர்ச்சி அவர்களுக்கு இல்லை என்பதையும், அது மார்க்சிலிருந்து லெனினுக்கு முன்னெடுக்கப்படவில்லை என்பதையும் இது காட்டுகிறது. அவர்கள் மார்க்சின் ஆரம்ப படைப்புகளையும் மிகவும் பலமாக ஊக்குவிக்கிறார்கள், அவை அவரின் எழுத்துக்களிலேயே மிகவும் முதிர்ச்சி குறைந்ததாக உள்ளன. இந்த முன்னோக்கில் இருந்து தான், ட்ரொட்ஸ்கிசத்திற்கான மார்க்சிசத்தின் பரிணாமம் தவிர்க்கவியலாததாக இருப்பதை நினைக்கிறேன்.

PS: முதலில் எது உங்களை ட்ரொட்ஸ்கியைக் குறித்து வாசிக்க தூண்டியது? அவரின் படைப்புகள் சீனாவில் கிடைக்கிறதா?

FH: அவரின் படைப்புகளை நான் தற்செயலாக தான் வாசிக்க தொடங்கினேன். நூலகத்தில் அவர் புத்தகம் ஒன்றைக் கண்டேன். அவரைக் குறித்து நான் முன்பே கேள்விப்பட்டிருந்தேன் என்றாலும், அந்த புத்தகத்தைப் பார்த்தப் பின்னர் தான் நான் அவர் படைப்புகளை வாசிக்கத் தொடங்கினேன். அவர் புத்தகங்கள் பரவலாக விற்கப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். அவரின் படைப்புகளை எத்தனை பேர் வாசித்து வருகிறார்கள் என்று துல்லியமாக எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவரின் நூல்கள் நன்கு விற்றுள்ளன என்றே நினைக்கிறேன். அவரின் வாழ்க்கை சரிதமும் ரஷ்ய புரட்சியின் வரலாறு நூலும் பல முறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன.

PS: நீங்கள் உலக சோசலிச வலைத் தளம் குறித்து எப்போது அறிந்தீர்கள்?

FH: அனேகமாக கடந்தாண்டாக இருக்கலாம். சொல்லப்போனால், 2011 இல், பல்வேறு சர்வதேச ட்ரொட்ஸ்கிச அமைப்புகளை அறிமுகப்படுத்தி, சீனாவில் ஒரு நூல் வெளியிடப்பட்டது. அந்நூலின் பின்னிணைப்பில் ஒவ்வொரு அமைப்புகளின் வரலாறு மற்றும் அவற்றிற்குரிய வலைத் தளங்களைக் குறித்து சுருக்கமாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே அப்போதே நான் [WSWS] குறித்து ஒரு பார்வை பார்த்திருந்தேன். இந்த வலைத் தளத்தைத் திறக்க VPN மென்பொருள் பயன்படுத்த வேண்டியிருக்கும். VPN இல்லாமல் இதை நீங்கள் பார்வையிட முடியாது.

PS: என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. மார்க்சிசத்தின் தொடர்ச்சியாக ட்ரொட்ஸ்கிசம் இருந்து வருகிறது என்று நீங்கள் என்ன கூறினீர்களோ அதற்கு வருவோம். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ட்ரொட்ஸ்கி நெடுகிலும் என்ன அடிப்படை கோட்பாடு ஓடிக் கொண்டிருக்கிறது என்று நான் கேட்டால், நீங்கள் எந்த அரசியல் கோட்பாட்டை அடையாளம் காட்டுவீர்கள்.

FH: முதலாவதாக ஒரு தெளிவான வர்க்க நிலைப்பாடு இருக்கும். அவர்கள் ஏனைய எந்த வர்க்கங்களின் வரலாற்றுரீதியிலான நலன்களையும் அல்ல, பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்று நலன்களை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் என்ற புள்ளியில் எப்போதுமே அவர்கள் தெளிவாக உள்ளனர். இது முதல் புள்ளி. இரண்டாவது, சமூகப் புரட்சிக்கான முன்னோக்காக இருக்கும். இந்த முன்னோக்கு தான் அவர்கள் அனைவருக்கும் மையமாக உள்ளது.

PS: நான் இன்னொன்றையும் சேர்ப்பேன், இது மார்க்சிசத்திற்கு அடிப்படையானதாக நினைக்கிறேன், அது சர்வதேசியவாதம். கம்யூனிஸ்ட் அறிக்கை உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றவொரு அழைப்புடன் நிறைவடைகிறது. மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி இவர்களிடையே சர்வதேசியவாதம் ஓடுகிறது.

FH: நான் உடன்படுகிறேன்.

PS: சோசலிசத்தை நோக்கி அதிருப்தி கொண்டவர்கள் மற்றும் ஈர்க்கப்பட்டவர்களில் ஒரு சிலர் மாவோவின் காலகட்டமே உண்மையான சோசலிசமாக இருந்துள்ளதாக பார்க்கிறார்கள் என்றறிவேன். சீனாவுக்குள் பல்வேறு மாவோயிச போக்குகள் உள்ளன. மேற்கில் அறியப்படும் கற்பனாவாதமும் ஒன்று உள்ளது. இன்னும் ஏனையவையும் உள்ளன. இவற்றை நோக்கி நீங்கள் ஈர்க்கப்படாதது ஏன்?

FH: முதலாவதாக, இது ஏனென்றால் முதலாளித்துவ வர்க்கத்தை நோக்கிய அவற்றின் நிலைப்பாடுகளால் ஆகும். அவர்கள் எப்போதுமே, முதலாளித்துவ வர்க்கத்திற்கு கல்வியூட்ட தேசபக்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த முன்னோக்கு மாவோவில் இருந்து ஜி வரையில் மாறாமல் இருக்கிறது. அவர்கள் இன்னமும் இந்த முன்னோக்கைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீண்ட காலத்திற்கு முன்னர் அல்ல ஒரு உரையில், ஜி கூறுகையில், பெருநிறுவனங்களும் சந்தைப்படுத்தல்களும் தேசிய எல்லைகளை மதிக்கவில்லை என்றாலும் கூட, தொழில்முனைவோர்களுக்கு தாய்நாடு உண்டு என்றார். தொழில்முனைவோர்களைக் கல்வியூட்ட அவர் இன்னமும் தேசபக்தியைப் பயன்படுத்தி வருகிறார். இது, அனைத்திற்கும் முதலாவதாக, மார்க்ஸ் இன் கருத்துருக்களுக்கு முற்றிலும் நேரெதிரானது. தொழிலாளர்களுக்கு தாய்நாடு இல்லை என்பதை மார்க்ஸ் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

இரண்டாவது காரணம் அவர்களின் தேசியவாதமாகும். அவர்கள் எப்போதுமே அவர்களின் வாக்கியங்களை "சீன தேசம்" என்று தொடங்குகிறார்க்கள். சீன தேசம் சில சிறப்பு ஆதாயங்களைக் கொண்டிருப்பதாகவும், அல்லது சர்வதேச சோசலிச இயக்கங்களின் பொது விதிகளில் இருந்து அது விதிவிலக்காக இருக்கும் விதத்தில் சீனா அதன் குறிப்பிட்ட சொந்த நிலைமையைக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் நினைக்கிறார்கள். இவ்விரு காரணங்களினாலுமே மாவோ தத்துவங்களில் எனக்கு ஆர்வம் ஏற்படவில்லையென நான் நினைக்கிறேன். அல்லது அதற்கு வேறுபட்டரீதியில், ட்ரொட்ஸ்கியின் தத்துவங்கள் மிகவும் தர்க்கரீதியில் உள்ளன. உண்மையில் அவர் இயங்கியல் சடவாத அணுகுமுறையை மேதமை கொள்கிறார், அதேவேளையில் மாவோவாதிகள் அதை செய்வதில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்களின் தத்துவங்களை அருகருகே வைத்து ஒப்பிட்டால், நான் ட்ரொட்ஸ்கியின் தத்துவங்களையே தேர்ந்தெடுப்பேன்.

மாவோவில் இருந்து ஜி வரையில், அவர்கள் அனைவரும் தத்துவத்தை அவமதிக்கின்றனர் என்பது மற்றொரு புள்ளியாகும். மார்க்ஸ் மற்றும் லெனின் படைப்புகளை அவ்வளவாக அவர் படித்ததில்லை என்பதை மாவோ அவரின் சொந்த படைப்புகளிலேயே தெரிவித்தார். அறிஞர்கள் மட்டுமே மார்க்ஸ் மற்றும் லெனினை வாசிக்கிறார்கள். தொழில்துறைரீதியில் புத்திஜீவிகள் மட்டுமே இவற்றை வாசிப்பார்கள் என்றவர் அர்த்தப்படுத்தினார். பெரும்பாலும் பண்டைய சீன வரலாறு சம்பந்தமான தொல்சீர் நூல்களையே மாவோ வாசித்தார். அதாவது வெவ்வேறு அரச வம்சங்களின் வரலாறான இருபத்தி நான்கு வரலாறுகள் என்பது. மார்க்ஸ் மற்றும் லெனினின் படைப்புகளில் பெரும்பாலானவற்றை வாசிப்பது பயனற்றது என்று டெங் சியாவோபிங்கும் கூறியிருந்தார். அவர் கம்யூனிஸ்ட் அறிக்கை மற்றும் கம்யூனிசத்தின் அடிப்படை (The ABC of Communism) மட்டுமே வாசித்திருந்தார். அவர்கள் தத்துவம் அவசியமற்றதென நினைக்கிறார்கள், இது மார்க்ஸில் இருந்து ட்ரொட்ஸ்கி வரையில் நீளும் மரபியத்திற்கு முற்றிலும் முரணாக உள்ளது. [மார்க்ஸில் இருந்து ட்ரொட்ஸ்கி வரையில்,] அவர்கள் தத்துவம் மிகவும் முக்கியமென நினைக்கிறார்கள், மேலும் தத்துவார்த்த பிரச்சினைகளுக்கு அவர்களின் அணுகுமுறை மிகவும் மிகவும் கவனமாக உள்ளன. மாவோவில் இருந்து ஜி வரையில், அவர்களில் யாருக்குமே இதுபோன்ற ஒரு நிலைப்பாடு இல்லை.

ஜி பதவிக்கு வந்த பின்னர், அவர், மார்க்சிச உலக பார்வை வறட்டுவாதம் இல்லை மாறாக அணுகுமுறை சம்பந்தப்பட்டதென பல முறை ஏங்கெல்ஸை மேற்கோளிட்டு குறிப்பிட்டார். அவர் மார்க்சிசத்தின் மிகவும் அடிப்படை கோட்பாடுகளை முற்றிலும் தூக்கியெறிந்துள்ளார் என்ற உண்மையை மூடிமறைக்க மட்டுமே இந்த வாக்கியத்தை அவர் மேற்கோளிட்டார். யதார்த்தத்தை மறைக்க மார்க்சிசத்தைப் பயன்படுத்தக்கூடாது என்றும் ஜி கூறியுள்ளார். ஆனால் உண்மையில் அவர் என்ன செய்கிறார் என்றால், மார்க்சிசத்தை அங்கீகரிக்கும் புள்ளியை விட்டுவிட்டு அதை குறைத்துக் காட்டுவதற்காக தேசியவாதம் மற்றும் சந்தர்ப்பவாதத்தைப் பயன்படுத்துகிறார். ஜி இன் தற்போதை தத்துவங்களில் மார்க்சிசத்தின் ஒரு குறிப்பை உங்களால் காண முடியாது.

PS: மிகவும் உண்மை. சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் வரலாற்றில் மிகவும் நிலைபேறான மாற்றத்தை நடத்த போகிறது என்றால், பின் அது உச்சபட்ச தத்துவார்த்த அபிவிருத்தியின் அடிப்படையில் இருக்க வேண்டும். அது தன்னிச்சையாக நடந்துவிடாது. “2020: சோசலிச புரட்சியின் தசாப்தம்" என்று தலைப்பிட்டு, உலக சோசலிச வலைத் தளம் இந்தாண்டு தொடக்கத்தில் ஒரு முன்னோக்கு பிரசுரித்தது. உலகெங்கிலும் வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சி நடந்து வருகிறது. தொழிலாள வர்க்கம் ஒரு சர்வதேச வர்க்கமாகும். ஒரு நாட்டில் நடந்து வரும் நிகழ்ச்சிப்போக்குகள், ஒவ்வொரு இடத்திலும் அதேதான் நடக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்றாலும், இருப்பினும், ஒவ்வொரு நாட்டிலும் பிரதிபலிக்கின்றன. சீனாவில் குறிப்பிட்ட தீவிரமயப்படல் நிகழ்ந்து வருகிறது, இதன் அறிகுறிகளை நாங்கள் பார்க்கிறோம். சீனாவில் சோசலிச புரட்சிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

FH: ஒரு தீர்மானகரமான சோசலிசவாதியாக, [சீனாவில் சோசலிச புரட்சிக்கான] சாத்தியக்கூறு குறித்து நான் மிகவும் சாத்தியமானதாகவும் எதிர்பார்ப்போடும் இருப்பதாக நினைக்கிறேன். அனைத்திற்கும் மேலாக, இந்த புரட்சி வெற்றிகரமாக அமைய வேண்டுமானால், அது தொழிலாள வர்க்கத்தின் ஒரு உண்மையான கட்சியால் தலைமை கொடுக்கப்பட வேண்டும். இந்த முற்கோள் இல்லாமல், அங்கே தன்னிச்சையான எழுச்சிகள் வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் அவை வெற்றியடைய முடியாது. நிச்சயமாக, வரலாறு ஏதோவிதத்தில் விரும்பத்தக்க திசையில் அபிவிருத்தி அடைகிறது என்றால், சான்றாக, அபிவிருத்தி அடைந்த மேற்கத்திய நாடுகளில் சோசலிச புரட்சி புரட்சி வெடித்து வெற்றி அடைந்தது என்றால், சீனாவில் ஒரு சோசலிச புரட்சியின் வெற்றி இன்னும் அதிக உறுதியாக இருக்கும் என்று நம்புகிறேன். சீனாவில் பெருந்திரளான மக்கள் தீவிரமயப்பட்டு வருகிறார்கள். அவர்களின் சிந்தனைகள் அதிகமாக தீவிரமடைந்து வருகின்றன. இவ்விதத்தில், புரட்சிகள் வெடிக்கும் ஒழுங்குமுறையையும், அவை எடுக்கும் வடிவத்தையும், இப்போது சரியாக கணிப்பது கடினமானது. ஆனால், சீனா விடயத்தில், உண்மையில் மக்கள் தீவிரமடைந்து வருகிறார்கள்.

Loading