சீனாவை எதிர்த்துப் போராட அமெரிக்கா தயாராக இருக்க வேண்டும் என்று உயர்மட்ட அட்மிரல் கூறுவதால் பென்டகன் பசிபிக்கான வரவு-செலவுத் திட்டத்தை இரட்டிப்பாக்கக் கோருகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க இராணுவமானது சீனாவை இலக்கு வைத்து இராணுவக் கட்டமைப்பைச் செய்யும் பாகமாக, முன்னெப்போதும் இல்லாத வகையில், பசிபிக்கில் அதன் வரவு-செலவுத் திட்டத்தை இரட்டிப்பாக்குமாறு காங்கிரஸைக் கேட்டுக் கொண்டுள்ளது.

"பசிபிக் தடுப்பு முயற்சி" என்று அழைக்கப்படுவதன் ஒரு பகுதியாக, "நீண்ட காலங்களுக்கு போர் நடவடிக்கைகளை தக்க வைக்கும்" திறனுடன், தைவான் மற்றும் ஜப்பானில் சீனாவை இலக்காகக் கொண்ட "துல்லிய-தாக்குதல் ஏவுகணைகளின் வலையமைப்பை" நிலைநிறுத்துவதை மையமாகக் கொண்டு பென்டகன் இந்த வேண்டுகோளை சமர்ப்பித்தது.

இந்த பிப்ரவரி 10, 20201 இல், புகைப்படம், ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் கூட்டுத் தலைமைகளின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி மற்றும் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டினுடன் வாஷிங்டனிலுள்ள பென்டகனில் நடந்து செல்கின்றனர். (AP Photo/Alex Brandon, Pool)

செவ்வாயன்று செனட் ஆயுதபடை சேவைகள் குழுவின் முன் அளித்த வாக்குமூலத்தில், இந்தோ-பசிபிக் கட்டளையகத்தின் தலைவரான கடற்படை அட்மிரல் பிலிப் டேவிட்சன், இராணுவ கட்டமைப்பானது சீனாவை அச்சுறுத்துவதை மட்டுமல்ல, ஒரு போரை நடத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்தினார்.

"போட்டியானது மோதலாக மாறினால் நாங்கள் போராடவும் வெற்றி பெறவும் தயாராக இருக்க வேண்டும்" என்று டேவிட்சன் கூறினார்.

உலகின் இரு முக்கிய அணுசக்தி சக்திகளுக்கு இடையே ஒரு மோதல் தவிர்க்கவியலாததாக இருக்கும் என்ற ஒரு குறிப்பிடத்தக்க அறிக்கையில், டேவிட்சன் ஒரு முக்கிய மோதலுக்கான கால அட்டவணை தசாப்தங்களில் அல்ல, ஆனால் ஆண்டுகளில் உள்ளது என்பதை தெளிவுபடுத்தினார்.

"ஒழுங்குமுறைகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கில் அமெரிக்காவையும் நமது தலைமை பாத்திரத்தையும் அகற்றுவதற்கான அவர்களின் இலட்சியங்களை அவர்கள் துரிதப்படுத்தி வருகின்றனர் என்று நான் கவலைப்படுகிறேன், இது 2050 க்குள் அதை செய்ய வேண்டும் என்று அவர்கள் நீண்ட காலமாக கூறிவருகின்றனர். அந்த இலக்கை இன்னும் நெருக்கமாக நகர்த்துவது குறித்து நான் கவலைப்படுகிறேன்," என்று அவர் தொடர்ந்தார். "தெளிவாக அதற்கு முன் தைவான் அவர்களுடைய இலட்சியங்களில் ஒன்றாகும். இந்த தசாப்தத்தில், உண்மையில், அடுத்த ஆறு ஆண்டுகளில் அச்சுறுத்தல் வெளிப்படுகிறது என்று நான் நினைக்கிறேன்."

கடந்த வாரம், டேவிட்சன் அமெரிக்கன் எண்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட்டில் தனது கருத்துக்களை எதிரொலித்தார், அங்கு அட்மிரல் வலியுறுத்தினார், “இப்போதும் 2026 க்கும் இடைப்பட்ட காலத்தில், இந்த தசாப்தத்தில், சீனா அதன் திறன் வலிமையில் விஞ்சியிருப்பதற்கான நிலையை அடைய நிலைநிறுத்தப்பட்ட கால எல்லை வரம்பாக இருக்கிறது, மற்றும் பெய்ஜிங் எப்போது முடிமோ, 'முடியும்,' பிராந்தியத்தில் நடப்பு நிலைமையை வலுக்கட்டாயமாக மாற்ற பரவலாக தேர்வு செய்யுங்கள். "

கடந்த வாரம் வெளிவிவகாரச் செயலர் அந்தோனி பிளிங்கனும் கூட சீனாவை ஒரு அமெரிக்க எதிரி என்று தனிமைப்படுத்தி கூறினார். "ரஷ்யா, ஈரான், வட கொரியா உட்பட பல நாடுகள் எங்களுக்கு கடுமையான சவால்களை முன்வைக்கின்றன," ஆனால் சீனா முன்வைத்து வரும் சவால் வேறுபட்டது. அமெரிக்காவிற்கு சவால் விடும் பொருளாதார, இராஜதந்திர, இராணுவ மற்றும் தொழில்நுட்ப வல்லமை கொண்ட ஒரே நாடு சீனாதான்" என்று அவர் கூறினார்.

பசிபிக்கில் இராணுவக் கட்டமைப்பிற்கான பென்டகனின் திட்டங்களானது பிளிங்கனின் வார்த்தைகளின் உள்ளடக்கத்தை தெளிவுபடுத்துகிறது. சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதார எடைக்கு அமெரிக்காவின் விடையிறுப்பு இராணுவ ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல் ஆகும்.

பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க ஏவுகணைக் கட்டுமான உருவாக்கம் 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தமான நடுத்தர-வீச்சு அணுசக்தி (INF) ஒப்பந்தத்திலிருந்து வாஷிங்டன் விலகியதைத் தொடர்ந்து வருகிறது.

"INF ஒப்பந்தமானது தேவையில்லாமல் அமெரிக்காவைக் கட்டுப்படுத்தியது," என்று செனட் வெளியுறவுக் குழுவின் உயர்மட்ட குடியரசுக் கட்சி உறுப்பினரான செனட்டர் ஜிம்ரிச்,நிக்கேய்பத்திரிகையிடம் கூறினார்.

சோவியத் ஒன்றியத்துடன் INF ஒப்பந்தம் கையெழுத்தாகி ரஷ்யாவுடன் ஒப்பந்தம் பயன்படுத்தப்பட்டாலும், அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்ள அமெரிக்காவின் முக்கிய இலக்காக இருந்தது சீனா தான்.

பென்டகனின் "பசிபிக் பாதுகாப்பு முன்முயற்சி" உடன், பின்வாங்குதலானது நடைமுறையில் எப்படி இருக்கும் என்பது தெளிவாகவுள்ளது: அதாவது சீனாவின் முக்கிய கடலோர நகரங்களுக்கு பறந்துசெல்லும் நேரமாக ஒரு சில நிமிடங்களுக்குள் செல்லும் ஏவுகணைகளை திட்டமிட்டபடி நிலைநிறுத்துதலானது எந்தநேரத்திலும் போருக்கான விசையை அமெரிக்காவையும் சீனாவையும் வைக்கிறது.

இந்தோ-பசிபிக்கில் நடுத்தர வீச்சு தூர ஏவுகணைகளை நிலைநிறுத்துவது என்பது "அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆராய்வதற்கான ஒரு பெரிய மற்றும் பெருகிய முறையில் அவசியமான விவாதப் பகுதி" என்று ரிஸ்ச்,நிக்கேய் பத்திரிகையிடம் கூறினார்.

இந்த நகர்வானது ஒரு பித்துபிடித்ததும், குற்றமுமான நடவடிக்கையாக உள்ளது. போர்க் காலத்தில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட ஒரே நாடான ஜப்பான் உலகின் இரு சக்தி வாய்ந்த இராணுவ சக்திகளுக்கு இடையே ஒரு மூழ்கடிக்க முடியாத விமானம் தாங்கி கப்பலில் ஒரு ஏவுகணை தயார்நிலையில் இருக்கையில் பயன்படுத்தப்படும். இந்த ஏவுகணைகள் அவற்றின் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டால், கூட்டுச் சேதம் ஜப்பானிய உயிர்களைக் கொண்டதாக இருக்கும்.

2034: அடுத்த உலகப் போரின் ஒரு நாவல் என்ற தலைப்பில் செவ்வாயன்று, ஒரு நாவல் தலைப்பிடப்பட்டிருந்தது, அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே ஒரு போருக்கு கட்டமைப்பதை சித்தரித்து, விற்பனைக்கு வந்தது. இது நேட்டோவின் முன்னாள் தலைமை தளபதியான அட்மிரல் ஜேம்ஸ் ஸ்டாவ்ரிடிஸ் (ஓய்வுபெற்றவர்) மற்றும் முன்னாள் மரைன் சிறப்பு நடவடிக்கை அதிகாரி எலியட் அக்கர்மன் ஆகியோரால் இணைந்து எழுதப்பட்டது.

இந்த புத்தகம் குறித்து கருத்து தெரிவித்த ஸ்டாவ்ரிடிஸ், "இந்த நாவலானது ஒரு மரபுமுறையான தாக்குதலிலிருந்து இரண்டாவது மரபுமுறையான தாக்குதலுக்கும் ஒரு மூன்றாவது மரபுமுறையான தாக்குதல் வரை செல்லும் அமெரிக்கா ஒரு தந்திரோபாய அணு ஆயுதத்தை நோக்கி சென்று அதை பயன்படுத்த முடிவு செய்யும் விரைவான ஒரு அழகான நம்பும்படியான உயரத்திற்கு செல்கிறது... நான் விரும்பியதை விட அது மிகவும் உண்மையானது [ஒரு வாய்ப்பு] ஆகும்."

Loading