வாடகை பெருமுதலைகளின் தனியார் உரிமையை அபகரிப்பதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம் தேவைப்படுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செப்டம்பர் 11 அன்று பேர்லினில் கட்டுப்படியாகாத வாடகை விலை குறித்த ஆர்ப்பாட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei, SGP) உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களால் பின்வரும் அறிக்கை விநியோகிக்கப்பட்டது.

***

சோசலிச சமத்துவக் கட்சி பேர்லினில் உள்ள பெரிய நில-கட்டிட உடமையாளர் குழுக்களின் வீட்டுப் பங்குகளை சமூகமயமாக்குவது குறித்த செப்டம்பர் 26 வாக்கெடுப்பில் ஆம் வாக்களிக்க அழைப்பு விடுக்கிறது. வாடகை பெருமுதலைகளிடமிருந்து அபகரிக்காமல் வாடகை மோசமான விலை உயர்வு பைத்தியத்தை நிறுத்த முடியாது. ஆனால் சமூக ஜனநாயகக் கட்சி / இடது கட்சி / பசுமைக் கட்சி செனட்டுக்கு எதிரான போராட்டத்திலும், மக்களின் தேவைகளை மூலதன நலன்களுக்கு மேலானதாக வைக்கும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே உண்மையான அபகரிப்பை அடைய முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சி பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் (WSWS media)

ஜேர்மனியின் தலைநகரில் வாடகை கடந்த பத்து ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளதுடன், மேலும் அபிவிருத்தியடையாத நிலத்தின் விலை எட்டு மடங்கு அதிகரித்துள்ளது. சமூகச் செல்வங்களை கீழ்மட்டத்திலிருந்து மேல்நோக்கி மறுவிநியோகம் செய்வதற்கான மிக முக்கியமான நெம்புகோலாக வீட்டுவசதி ஊகவாணிபங்கள் மாறிவிட்டன. முக்கிய சொத்து நிறுவனங்களான Deutsche Wohnen, Vonovia மற்றும் அவற்றின் பங்குதாரர்கள் ஒரு விரல் கூட உயர்த்தாமல் பாரிய வருவாயைப் பெறுகையில், மக்கள் உறுஞ்சியெடுக்கப்படுகின்றனர்.

அதிகரித்து வரும் வாடகைகள், அதிகப்படியான துணை செலவுகள் மற்றும் ஆடம்பர சீரமைப்பு ஆகியவற்றிற்று கடினமாக உழைக்கும் மக்கள் தங்கள் வருமானத்தில் பாதிக்கு மேல் வாடகைக்கு செலவிட வேண்டும் அல்லது இனி ஒரு குடியிருப்பை பெறமுடியாதுள்ளது. பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சர்வதேச உடன்படிக்கையில் நங்கூரமிடப்பட்டுள்ள குடியிருப்புக்கான மனித உரிமை, வாடகை பெருமுதலாளிகளின் இலாபப் பசிக்கு தியாகம் செய்யப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பை நடாத்த ஏற்றுக்கொள்வது அதை மாற்றாது. சமூக ஜனநாயகக் கட்சி, இடது கட்சி மற்றும் பசுமைக் கட்சிகளின் கூட்டணியிலுள்ள செனட் ஏற்கனவே பேர்லின் மக்களுக்கு தனது நடுவிரலைக் காட்டி மற்றும் அது வாக்கெடுப்பின் நேர்மறையான முடிவை ஏற்காது என்பதை தெளிவாக்கியுள்ளது.

'வாக்கெடுப்பு பற்றிய உத்தியோகபூர்வ அறிக்கைகளில்' இக்கூட்டணியானது 'செனட்டின் வாதங்களை' 'உபயதாரரின் வாதங்களுடன்' அதாவது Deutsche Wohnen & Co இனை அபகரிப்பதற்கான முயற்சிக்கு எதிராக வைத்துள்ளது. 'வாக்கெடுப்புக்கு இந்த விடயம் தொடர்பான ஒரு குறிப்பிட்ட மசோதா இல்லை' என்று அது குறிப்பிடுகிறது. 'வாக்கெடுப்பு வெற்றி பெற்றால், அதற்கு செனட் சட்டபூர்வமாக கட்டுப்படாது மற்றும் ஒரு சமூகமயமாக்கல் சட்டத்தை இயற்றுவதற்கான முடிவு பிரதிநிதிகள் சபையின் பொறுப்பில் இருக்கும்.' என அறிவித்தது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வாக்கெடுப்பு ஒரு குறிப்பிட்ட மசோதா பற்றியது அல்ல. ஆனால் தெளிவாக வரையறுக்கப்பட்ட தேவைகளுடன் ஒரு மசோதாவை உருவாக்க செனட் பணிக்கப்பட்டிருப்பதால், செனட் இந்த முடிவிற்கு 'சட்டபூர்வமாக கட்டுப்பட்டிருக்கவில்லை' என்று அறிவித்து பிரதிநிதிகள் சபையின் சுயாதீனத்திற்கு அழைப்புவிடுகின்றது.

இருபது வருடங்களாக பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் கட்சிகள் வாடகை பெருமுதலாளிகளுடன் உடன்படுகின்றன. அந்த நேரத்தில், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் இடது கட்சி (இது இன்னும் PDS என அழைக்கப்படுகிறது) மலிந்த விலையில் தனியார் நில-கட்டிட நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட 200,000 அரசாங்க குடியிருப்புகளை விற்றது. இன்றுவரை, செனட் மற்றும் வாடகை பெருமுதலாளிகளுக்கு இடையிலான இந்த கூட்டுழைப்பு பற்றிய எதுவும் மாறவில்லை. செனட் உண்மையில் வாடகை விலையை உயர்த்த இந்த பெருமுதலாளிகளை ஊக்குவிக்கிறது.

வாக்கெடுப்பின் உள்ளடக்கம் சட்டபூர்வமாக சாத்தியமான “சந்தை மதிப்புக்குக் கீழான இழப்பீடு” கோருகிறது மற்றும் வாக்கெடுப்பை முன்னெடுப்பவர்கள் 200,000 குடியிருப்புகளுக்கு 7.3 முதல் 13.7 பில்லியன் யூரோக்கள் என மதிப்பிடுகின்றனர். பதிலாக செனட் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக தொகையை வெளியிட்டுள்ளது. அதன் கணக்கீட்டின்படி, நில-கட்டிட நிறுவனக் குழுக்கள் 243,000 குடியிருப்புகளுக்கு 28.2 முதல் 36 பில்லியன் யூரோக்களை சேகரிக்கலாம்.

எவ்வாறாயினும், நடைமுறையில், செனட் அவர்களின் பைகளுள் மிகப் பெரிய தொகையை செலுத்துகிறது. நிதி செனட்டர் மத்தியாஸ் கொலாட்ஸ் (SPD) Vonovia மற்றும் Deutsche Wohnen ஆகியோருக்கு வாக்கெடுப்பிற்கு முன்னரே கிட்டத்தட்ட 15,000 நகராட்சி குடியிருப்புகளை 2.4 பில்லியன் யூரோ விலையில் விற்க ஒப்புக்கொள்கிறார். இரண்டு வீட்டு நிறுவனங்களும் தற்போது சில அடுக்குமாடி குடியிருப்புகளை ஒன்றிணைத்து விற்பனை செய்கின்றன. ஆனால் பேர்லினில் உள்ள அனைத்து வாடகை குடியிருப்புகளில் 10 சதவிகிதத்தை விற்பனைக்கு பிறகும் அவை கட்டுப்படுத்தும்.

எண்களில் இவற்றை எடுத்துக்காட்டினால்: 2004 இல் சமூக ஜனநாயகக் கட்சி / இடது கட்சி செனட் பேர்லின் மாநகராட்சியின் 65,000 குடியிருப்புகளை 6150 யூரோக்கள் சராசரி விலையில் Deutsche Wohnen க்கு விற்றது; வாக்கெடுப்பை முன்னெடுப்பவர்கள் இழப்பீட்டுக்காக சராசரியாக 37,000 முதல் 69,000 யூரோ வரை ஒரு குடியிருப்பிற்கான விலையை நிர்ணயித்தனர்; செனட் ஒரு குடியிருப்புக்கு 116,000 முதல் 148,000 யூரோக்கள் வரை கணக்கிடுகிறது; மற்றும் கொலாட்ஸ் பெருநிறுவனங்களிடமிருந்து குடியிருப்புகளை சராசரியாக 163,000 யூரோ விலையில் வாங்குகிறார்!

இந்த எண்கள், சமூக ஜனநாயகக் கட்சி, இடது கட்சி மற்றும் பசுமைக் கட்சி வாடகை பெருமுதலைகளுக்காக திறந்திருக்கும் தங்கச் சுரங்கத்தை பற்றிய ஒரு கருத்தை தருகின்றன. மதிப்பு அதிகரிப்புக்கு மேலதிகமாக, அதிக வாடகை வருமானங்களும் உள்ளன. Deutsche Wohnen 2019 ஆம் ஆண்டில் மட்டும் 350 மில்லியன் யூரோக்களை பங்குதாரர்களுக்கு விநியோகித்தது; அதாவது ஒரு குடியிருப்புக்கு 2100 யூரோக்கள். இது வாடகைதாரர்களின் பைகளில் இருந்து நேரடியாக பங்குதாரர்களின் கணக்குகளுக்கு பாய்கிறது.

சமூக ஜனநாயகக் கட்சி, இடது கட்சி மற்றும் பசுமைக் கட்சிகள் - தேர்தல் பிரச்சாரத்தில் அதிக வாடகைக்கு தங்கள் முதலை கண்ணீரை வடித்தாலும் தமது இரண்டு கால்களுடன் மூலதனத்தின் முகாம்களில் நிற்கின்றன. இது வீட்டுப் பிரச்சினைக்கு மட்டுமல்ல, சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பிற்கும் பொருந்தும். சரிட்டி மற்றும் விவான்டஸ் மருத்துவமனை ஊழியர்கள் தற்போது பல வருட சிக்கன மற்றும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளின் தாங்க முடியாத விளைவுகளுக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பொது சேவை மற்றும் உள்ளூர் போக்குவரத்து பிரிவில் இவர்கள் பல்லாயிரக்கணக்கான வேலைகளை அழித்து வருகின்றனர்.

பொது வாக்கெடுப்பு முழுமையாக செயல்படுத்தப்பட்டாலும் கூட எரியும் வீட்டு பற்றாக்குறையை தீர்க்க முற்றிலும் போதாது. 3,000 குடியிருப்புகளைக் கொண்ட அனைத்து தனியார் வீட்டு நிறுவனங்களின் பங்குகளை சமூகமயமாக்குவதை மட்டுமே இது கோருகிறது. அவை பொதுச் சட்டத்தின் கீழ் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்திற்கு மாற்றப்பட வேண்டும், இதில் குடியிருப்பாளர்கள் வாடகை பற்றி ஜனநாயக ரீதியாகக் கருத்தை தெரிவிக்கும் உரிமையை கொண்டிருக்கவேண்டும். இது சுமார் 200,000 முதல் 250,000 குடியிருப்புளுக்கு பொருந்தும். இது குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு மலிவு வீடுகள் இல்லாததை போக்கும் நோக்கத்தை கொண்டிருக்கும். இது தலைநகரில் கடுமையான வீட்டுப் பற்றாக்குறை மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தனியார் முதலீட்டாளர்களின் வீட்டுவசதிகளில் ஊகவாணிபத்தை நிறுத்தாது.

இந்த பொதுவாக்கெடுப்பின் குறிக்கோள்கள், மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது முதலாளித்துவ சொத்துக்களைப் பாதுகாக்கும் பரிந்துரைக்கப்பட்ட சட்ட கட்டமைப்பை இதனை முன்னெடுப்பவர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியிருப்பதால் மட்டுமல்ல. அவர்களில் பெரும்பாலோர் செனட்டில் இருக்கும் கட்சிகளின் அணிகளில் அல்லது வட்டத்திலிருந்து, குறிப்பாக இடது கட்சியில் இருந்து வருகிறார்கள். அவர்களின் முழு மூலோபாயமும் செனட்டின் போக்கை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. எவ்வாறாயினும் அனைத்து வரலாற்று மற்றும் சர்வதேச அனுபவங்கள் காண்பிப்பது போல அது சாத்தியமற்றது.

சமூக ஜனநாயகக் கட்சி அதிபர் ஓலாவ் ஷோல்ஸின் கீழ் மற்றும் ஜேர்மன் இராணுவவாதத்தின் முன்னோடிகளாக மாறிய பசுமைகளுடன் கூட்டணி அமைத்து, அடுத்த கூட்டாட்சி அரசாங்கத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய அனைத்தையும் இடது கட்சி செய்து வருகிறது. எனவே அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கையில் அதன் 'நம்பகத்தன்மையை' நிரூபிக்க முடிந்த அனைத்தையும் செய்கிறது.

வாக்கெடுப்பைத் தொடங்கியவர்களை விட முற்றிலும் மாறுபட்ட மூலோபாயத்தை சோசலிச சமத்துவக் கட்சி பின்பற்றுகிறது. நாங்கள் ஸ்தாபகரீதியான கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களை நம்பியிருக்கவில்லை, ஆனால் உலகெங்கிலும் பெரும் உந்துசக்தியுடன் வளர்ந்து வரும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கத்தை நம்பியிருக்கிறோம்.

குறைந்த ஊதியம், தாங்கமுடியாத வேலை நிலைமைகள் மற்றும் சமூக வெட்டுக்களுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் உலகளவில் அதிகரித்து வருகின்றன. மேலும் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் இந்தப் போராட்டங்கள் ஆளும் வர்க்கத்தின் முகாமில் உள்ள பழைய தொழிலாளர் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிரான வெளிப்படையான கிளர்ச்சியுடன் உருவாகின்றன. இங்கு பேர்லினில், கடந்த சில நாட்களில் சீமென்ஸ் தொழிலாளர்கள் பணிநீக்கம் மற்றும் இரயில் ஓட்டுநர்களுக்கு ஊதியக் குறைப்புக்கு எதிராக போராடினர். அரசுக்கு சொந்தமான சரிட்டி மற்றும் விவான்டஸ் மருத்துவமனைகளின் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வாக்கெடுப்பின் வெற்றி இந்த வெடிக்கும் சூழ்நிலையின் வெளிப்பாடாகும். 2019 ஆம் ஆண்டில், வெறும் மூன்று மாதங்களில், 77,000 பேர் அதன் தொடக்கத்திற்கான இயக்கத்தில் கையெழுத்திட்டனர். இது தேவைப்படும் அளவை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாகும். இந்த ஆண்டு, 175,000 மட்டுமே தேவைப்படுகையில் வெறும் நான்கு மாதங்களில் 350,000 பேர் தங்கள் கையெழுத்துடன் வாக்கெடுப்பை ஆதரித்தனர்.

ஆளும் வர்க்கமும் அதன் கட்சிகளும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச தாக்குதலுக்கு பாசிச சக்திகளை வலுப்படுத்தி, அரசு இயந்திரத்தை ஆயுதமாக்கி, இராணுவவாதத்தை ஊக்குவிப்பதன் மூலம் பதிலளித்து வருகின்றன. இந்த எதிர்வினை அவர்களின் மனிதாபிமானமற்ற கொரோனா கொள்கையில் மிக தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது நிறுவனங்களின் இலாப நலன்களுக்காக அனைத்து மனித உயிர்களையும் தியாகம் செய்வதுடன் மற்றும் வைரஸை ஒழிப்பதற்கான விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்ட கொள்கையை நிராகரிக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சியின் குறிக்கோள், தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களுக்கு ஒரு சோசலிச நோக்குநிலையை வழங்குவதும், நான்காம் அகிலத்தின் சகோதர கட்சிகளுடன் இணைந்து அவர்களை சர்வதேச அளவில் ஒன்றிணைப்பதும் ஒரு சோசலிச வெகுஜனக் கட்சியை உருவாக்குவதும் ஆகும்.

நீங்கள் உண்மையில் வாடகை பெருமுதலாளிகளிடம் இருந்து அபகரிக்க விரும்பினால், பேர்லின் பிரதிநிதிகள் சபையில் சோசலிச சமத்துவக் கட்சியின் பட்டியலுக்கும், செப்டம்பர் 26 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தலிலும் வாக்களிக்க வேண்டும். இழப்பீடு இல்லாமல் அனைத்து வீட்டு உடமை குழுக்களையும் அபகரிக்க நாங்கள் பரிந்துரைக்கிறோம். எங்கள் தேர்தல் வேலைத்திட்டத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது:

'வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை அபகரித்து அவற்றை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்காமல் எந்த சமூகப் பிரச்சினையும் தீர்க்கப்பட முடியாது. அவர்களின் இலாபங்கள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவது மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட டிரில்லியன் கணக்கான பணமும் மீட்கப்பட வேண்டும். உலகப் பொருளாதாரம் விஞ்ஞான மற்றும் பகுத்தறிவான திட்டத்தின் அடிப்படையில் மறுஒழுங்கமைக்கப்பட வேண்டும்.

Loading