ஜேர்மனிய நாடாளுமன்றம் ரஷ்யாவிற்கு எதிரான போரை தீவிரப்படுத்த பின்லாந்து மற்றும் சுவீடனை நேட்டோ இணைத்துக்கொள்வதற்கு வாக்களித்தது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மனியின் கீழ் மற்றும் மேல் அவைகள் நேட்டோவில் சுவீடனையும் பின்லாந்தையும் ஏற்றுக்கொள்ள வெள்ளிக்கிழமை பெரும் பெரும்பான்மையுடன் வாக்களித்தன. மாட்ரிட்டில் நேட்டோ உச்சிமாநாட்டில் ஒப்புக் கொள்ளப்பட்ட இராணுவக் கூட்டணியின் வடக்கு நோக்கிய விரிவாக்கத்தை பொதுவாக அங்கீகரித்த முதல் நாடாக ஜேர்மனி உள்ளது.

பின்லாந்து மற்றும் சுவீடனின் இணைப்புடன், நேட்டோ ரஷ்யாவிற்கு எதிரான போரில் ஸ்காண்டிநேவியா மற்றும் பால்டிக் கடல் பகுதி முழுவதும் ஒரு புதிய முன்னணியை உருவாக்குகிறது. இது ஒரு அணுஆயுத சக்திக்கு எதிரான ஒரு முழுமையான போரின் அபாயத்தை மேலும் அதிகரிப்பதுடன் மில்லியன் கணக்கான உயிர்களின் இழப்பினையும் மற்றும் முழு ஐரோப்பாவின் அழிப்பினையும் உருவாக்கக்கூடும்.

வாக்கெடுப்புக்கு முந்தைய நாள், பின்லாந்து பாராளுமன்றம் ரஷ்யாவுடனான 1,300 கிலோமீட்டர் நீளமுள்ள நில எல்லையை பாரியளவில் பலப்படுத்த ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. சட்டத்தின் நோக்கம் 'ரஷ்யாவிலிருந்து கலப்பின அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் எல்லை பாதுககாவலர்களின் செயல்பாட்டு திறனை மேம்படுத்துவதாகும்' என உள்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் அன்னே இஹானஸ் கூறினார்.

அவ்வாறு செய்வதன் மூலம், நேட்டோ வடக்கு ஐரோப்பாவில் ஒரு ஆபத்தான மறுஆயுதமயமாக்கல் சுழற்சியை உருவாக்குகிறது. பின்லாந்து மற்றும் சுவீடனில் 'இராணுவக் குழுக்கள் மற்றும் இராணுவ உள்கட்டமைப்பு நிலைநிறுத்தப்பட்டால்,' ரஷ்யா அதற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நேட்டோ உச்சிமாநாட்டின் போது எச்சரித்தார்.

ஆயினும்கூட, இந்தப் போர்க் கொள்கை முழு ஆளும் வர்க்கத்தாலும் ஆதரிக்கப்படுகிறது. ஆளும் சமூக ஜனநாயகவாதிகள் (SPD), சுதந்திர ஜனநாயகவாதிகள் (FDEP) மற்றும் பசுமைவாதிகள் தவிர, கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்தவ சமூக ஒன்றியம் (CDU/CSU) மற்றும் ஜேர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்றீடு (AfD) ஆகியவையும் சுவீடன், பின்லாந்தின் இணைவை ஆதரித்தன. நேட்டோ விரிவாக்கத்தை ஆதரிக்கிறது என்பதை தெளிவுபடுத்தும் அதே வேளையில், இடது கட்சி மட்டுமே நாடாளுமன்றத்தில் இதற்கு எதிராக வாக்களித்தது.

அவரது உரையில், இடது கட்சியின் வெளியுறவுக் கொள்கை செய்தித் தொடர்பாளர் கிரிகோர் கீசி, சுவீடன் மற்றும் பின்லாந்தை பாராட்டினார். அவர்கள் 'சமீபத்திய தசாப்தங்களில் இராணுவ ரீதியாக நடுநிலையான நாடுகளாக அவை அதிகமாக செய்திருக்கிறார்கள்.' ஆனால் பின்னர் ரஷ்யா “சர்வதேச சட்டத்தை மீறி உக்ரேனைத் தாக்கியது. அதனால்தான் பாதுகாப்புக்கான அவர்களின் அத்தகைய தேவையை நாம் மதிக்க வேண்டும்” என்றார்.

இடது கட்சி நாடாளுமன்றக் குழு வாக்கெடுப்பில் சுவீடன் மற்றும் பின்லாந்து நேட்டோவில் இணைவதை நிராகரிக்காமல், அதற்குப் பதிலாக கலந்துகொள்ளாமல் இருக்க வேண்டும் என்று தான் உண்மையில் பரிந்துரைக்க விரும்புவதாக கீசி இழிந்த முறையில் கூறினார். இதற்காக 'சுவீடன், பின்லாந்து மற்றும் முழு நேட்டோவும் ... துருக்கிக்கு கொடுக்க வேண்டிய விலை மிக அதிகமாக' இருப்பினும், எனவே அவர் தனது குழுவிற்கு எதிராக வாக்களிக்குமாறு அறிவுறுத்தினார். ஆனால் 'மற்ற பிரதிநிதிகளும் இதையெல்லாம் விமர்சிக்கிறார்கள்' என்பது அவருக்குத் தெரியும்.

இந்த நிலைப்பாடு அம்பலப்படுத்தப்பட்டதும் மற்றும் தெளிவானதுமாகும். உண்மையில், இடது கட்சி ரஷ்யாவுடனான நேட்டோவின் போரை ஆதரிக்கிறது. ஏர்ஃபோர்ட்டில் நடந்த அதன் சமீபத்திய கட்சி மாநாட்டில் கட்சி இதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது, அங்கு ஏராளமான பேச்சாளர்கள் உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு ஆதரவாகப் பேசியதுடன் மற்றும் உக்ரேனிய அமைப்புகளுக்கு ஒரு மேடையை வழங்கினர். இந்த அமைப்பின் உறுப்பினர்கள் ரஷ்யாவிற்கு எதிராக நேரடியாகப் போராடி மேலும் “உக்ரேனுக்கு ஜேர்மன் இராணுவ உதவியை கோருகின்றனர்.”

இதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. தனது உரையில், பாதுகாப்பு மந்திரி கிறிஸ் ரீன் லாம்பிரெக்ட் (SPD) நேட்டோவின் வடக்கு விரிவாக்கம் ரஷ்யாவிற்கு எதிரான ஒரு விரிவான இராணுவத் தாக்குதலின் ஒரு பகுதி என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

'நேட்டோவின் கிழக்கு எல்லையில் நமது தடுப்பு மற்றும் பாதுகாப்பு திறன்களை மேலும் வலுப்படுத்துவது முடிவு செய்யப்பட்டு ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது,' என்று அவர் பெருமையாக கூறினார். அமெரிக்க ஜனாதிபதி ஜோசெப் பைடென் 'அதிகாரத்திற்கு வந்த பின்னர் இரண்டாவது முறையாக ஐரோப்பாவில் அமெரிக்காவின் துருப்புக்களின் இருப்பை அதிகரிக்க முடிவு செய்தார். இதன் மூலம் ஐரோப்பாவிற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை தெளிவாக உறுதிப்படுத்தினார்'. பல தசாப்தங்களாக வெட்டுக்கள் மற்றும் அகற்றலுக்குப் பின்னர், 'நேச நாடுகளின் பாதுகாப்புச் செலவு மீண்டும் அதிகரித்து வருகிறது' என்று அவர் கூறினார். ஜேர்மனி '100 பில்லியன் யூரோ சிறப்பு நிதியுடன் ஆயுதப் படைகளுக்கு (Bundeswehr) மிக முக்கியமான பங்களிப்பைச் செய்தது' என்றார்.

கடந்த வாரம் 30 நேட்டோ உறுப்பு நாடுகள் தங்கள் கூட்டணிக்கு 'ரஷ்ய அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும்' மற்றும் 'எதிர்காலத்தின் அபாயங்கள் மற்றும் சவால்களை கவனிக்கும்' ஒரு புதிய மூலோபாய கருத்தை வழங்கியதாக கடந்த வாரம் லாம்பிரெக்ட் சுட்டிக்காட்டினார். பின்லாந்து மற்றும் சுவீடனின் இணைப்பு 'இந்த பரந்த உள்ளடக்கத்தில்' பார்க்கப்பட வேண்டும். அவர் தொடர்ந்தார், 'தன்னை தயார்ப்படுத்திக்கொள்ளும் மாற்றத்திற்குட்படும் ஒரு கூட்டணிக்கு இது பொருத்தமானது. எதிர்காலத்தில் பாதுகாப்பிற்கு இது தீர்க்கரமான உத்தரவாதமாக இருக்கும்' என்று அவர் கூறினார்.

அணுவாயுதங்களுடனான மூன்றாம் உலகப் போருக்கான தயாரிப்பான நேட்டோ 'பாதுகாப்பு' மற்றும் 'எதிர்காலத்திற்கு பொருத்தமானது' என்பதன் பொருள் பற்றி மேலும் உறுதியான விவரங்களுக்கு செல்ல வேண்டாம் என்று லாம்பிரெக்ட் முடிவெடுத்தார்.

நேட்டோவின் புதிய மூலோபாய கருத்து பின்வருமாறு கூறுகிறது: 'நாங்கள் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் சக போட்டியாளர்களுக்கு எதிரான அதி-தீவிர, குறுக்கு பரிமாணப் போர் உட்பட, தடுப்பு மற்றும் பாதுகாப்பிற்கு தேவையான தனித்தனியாகவும் கூட்டாகவும் முழு அளவிலான படைகளை வழங்குவோம் ....'

இந்த பைத்தியக்காரத்தனத்தில் ஜேர்மனி முக்கிய பங்கு வகிக்கிறது. நேட்டோ உச்சிமாநாட்டிற்குப் பின்னர், பெடரல் சான்ஸ்லர் ஓலாப் ஷோல்ஸ் (SPD) போரை முன்னோக்கி தள்ள இராணுவம் 'வடகிழக்கு ஐரோப்பாவின் பாதுகாப்பிற்காக 15,000 துருப்புக்கள், 60 க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 20 கடற்படைப் பிரிவுகள் வரை கவசப் பிரிவை நிரந்தரமாக பராமரிக்கும்' என்று அறிவித்தார். இது நேட்டோ பதிலடி படையின் (NRF) ஒரு பகுதியாகும். இது 40,000 லிருந்து 300,000 ஆட்பலமாக அதிகரிக்கப்படும்.

கூடுதலாக, 'ஒரு போர் படைப்பிரிவு' அதாவது, 5,000 படையினர்கள் வரை, 'லித்துவேனியாவில் கூட்டணி பிரதேசத்தின் பாதுகாப்பிற்காக பிரத்தியேகமாக' தயார் செய்யப்படும். மேலும் 'பால்டிக் கடல் பிராந்தியத்திற்கான பிராந்திய கடற்படை கட்டளையகம்' அமைக்கப்படும். இது கடல்சார் துறையில் தலைமைப் பொறுப்பை ஏற்க முடியும்”.

ஜேர்மனியின் ஆளும் வர்க்கம் நேட்டோ தாக்குதலை நீண்டகாலமாக வைத்திருந்த மறுஆயுதமயமாக்கல் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், இரண்டு உலகப் போர்களில் தோல்வியடைந்த பின்னர் ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் முன்னணி இராணுவ சக்தியாக தன்னை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாகக் கருதுகிறது. நேட்டோவிற்குள் ஜேர்மன்-ஐரோப்பிய பலத்தை அதிகரிக்கவும், பேர்லினின் இராணுவத் தலைமையின் கீழ் கண்டத்தை ஒழுங்கமைக்கவும் மத்திய அரசாங்கம் குறிப்பாகச் செயல்படுகிறது.

'நேட்டோவில் ஐரோப்பிய பாத அடையாளம்' பின்லாந்து மற்றும் சுவீடன் இணைந்தவுடன் 'இன்னும் அதிகமாக' இருக்கும் என்று லாம்பிரெக்ட் நாடாளுமன்றத்தில் கூறினார். ஏற்கனவே அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் நிகழ்ச்சி நிரலை அமைக்கும் ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 'இது ஒரு முக்கியமான, நல்ல முடிவு.' மொத்தம் '27 (EU) உறுப்பினர்களில் 23 பேர் கூட்டணியைச் சேர்ந்தவர்கள்'. மேலும் 'தீவிர ஒத்துழைப்பின்' வாய்ப்புகள் 'இதன் விளைவாக இன்னும் அதிகமாக இருக்கும்.'

அரசாங்கம் அதை வெளிப்படையாகக் கூறவில்லை, ஆனால் ஜேர்மன் ஏகாதிபத்தியம் கிழக்கு ஐரோப்பா மற்றும் யூரேசியாவை கட்டுப்படுத்துவதற்கும் சூறையாடுவதற்குமான போராட்டத்தில் அமெரிக்காவுடன் மோதலுக்கு திரைக்குப் பின்னால் தயாராகி வருகிறது என்பது தெளிவாகிறது.

தீவிர வலதுசாரி AfD இன் கெளரவத் தலைவர் அலெக்சாண்டர் கவுலாண்ட், நேட்டோவில் சுவீடன் மற்றும் பின்லாந்தின் சேர்க்கையை ஆதரிக்கும் மத்திய அரசின் முடிவை 'சிறந்த அர்த்தத்தில் யதார்த்த அரசியல்' என்று பாராட்டினார். 'பெரும்பாலும் ஐரோப்பிய விருப்பங்களுக்கு முரணான அமெரிக்காவின் பல்வேறு புவிசார் மூலோபாய நலன்களைக் காட்டிலும், இந்த இணைப்புகள் ஐரோப்பிய எடை எதிர்காலத்தில் நேட்டோ கொள்கையை தீர்மானிக்கும் என்ற உண்மைக்கு வழிவகுத்தால், இது கூடுதல் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும்' என்றார்.

AfD இன் பாதுகாப்புத்துறை அரசியல்வாதியும், ஜேர்மன் இராணுவத்தின் ஓய்வுபெற்ற தளபதியுமான றூடிகர் லூக்காஸன் தனது உரையில் இன்னும் தெளிவாக இருந்தார்.

'ஒரு ஐரோப்பிய நேட்டோ பெரும் வல்லரசுகளின் துணையிலிருந்து ஐரோப்பாவை விடுவிப்பதற்கான ஒரு தேவையாகும். சுவீடன் மற்றும் பின்லாந்து இதற்கு பங்களிக்க முடியும். வரவேற்கத்தக்க பரிசாக, மத்திய அரசு இறுதியாக அது கூறுவதை செயற்படுத்த வேண்டும். ஐரோப்பாவின் வலிமையான இராணுவமாக ஜேர்மன் இராணுவத்தினை உருவாக்குவது மற்றும் முன்னணியில் செல்வதே இலக்காக இருக்க வேண்டும். மூலோபாய சுயாட்சி உங்களுக்கு வழங்கப்படவில்லை; நீங்கள் அதை எடுக்க வேண்டும்' என்று அவர் அறிவித்தார்.

AfD அரசியல்வாதிகளின் பேச்சுக்கள் மட்டும் ஜேர்மன் வரலாற்றில் இருண்ட காலத்தை நினைவுபடுத்தவில்லை. சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான ஜேர்மன் அழிப்புப் போருக்கு எண்பத்தொரு ஆண்டுகளுக்குப் பின்னர், ஒரு பேச்சாளர் ஒருவர் பின் ஒருவராக ரஷ்யாவிற்கு எதிராக ஆவேசமாகப் பேசினர். அலெக்ஸ்ஸண்டர் கிராவ் லம்ஸ்டோர்வ் (FDP) இன் படி, மாஸ்கோவின் வெளியுறவுக் கொள்கை 'விரிவாக்கவாத, திருத்தல்வாத மற்றும் உண்மையில் வன்முறை' ஆகும். கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் ஜோகான் டேவிட் வாடபூல் கிரெம்ளின் 'தொலைநோக்கான ஏகாதிபத்திய புவியியல் உரிமைகோரல்களை உருவாக்குகிறது' என்று குற்றம் சாட்டினார்.

உண்மையில், ஏகாதிபத்திய சக்திகளின் வெளியுறவுக் கொள்கையும் அதுதான். உக்ரேனின் மீதான ரஷ்ய படையெடுப்பு பிற்போக்குத்தனமானது. ஆனால் இது இறுதியில் நேட்டோ சக்திகளின் ஏகாதிபத்திய போர்க் கொள்கைக்கு முதலாளித்துவ புட்டின் ஆட்சியின் அவநம்பிக்கையான பதிலடியாகும். நேட்டோ கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகப் போரை நடத்தி வருகின்றனர். மேலும் ஐரோப்பாவிலேயே உள்ள நாடுகள் உட்பட ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவை முழுதாக அழித்துள்ளனர்.

ஜேர்மன் ஏகாதிபத்தியம் ஆரம்பத்திலிருந்தே இதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஜேர்மனி மற்றும் அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில், குரோஷியா மற்றும் சுலோவேனியாவின் சுதந்திரத்தை அங்கீகரிப்பது ஆரம்பத்தில் முன்னாள் யூகோஸ்லாவியாவில் ஒரு பயங்கரமான உள்நாட்டுப் போரைத் தூண்டியது. 1999 இல், நேட்டோவினால் சேர்பியா மீதான குண்டுவீச்சு கொசோவோவின் வன்முறையான பிரிவினையில் உச்சக்கட்டத்தை அடைந்தது. பால்கன் பகுதியிலும் இந்த ஏகாதிபத்திய தாக்குதல் தொடர்கிறது. வெள்ளியன்று, கொசோவோவில் ஜேர்மன் இராணுவத்தின் செயல்பாடுகளை நாடாளுமன்றம் நீட்டித்ததுடன் மற்றும் பொஸ்னியா-ஹெர்செகோவினாவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளுக்கு மீண்டும் திரும்பியது.

Loading