ஃபோர்டு சார்லூயிஸ் ஆலை மூடல் அறிவிக்கப்பட்ட நான்கு வாரங்களுக்குப் பின்னர், தொழிற்சாலை தொழிற்சங்க குழுவும் தொழிற்சங்கமும் தொழிலாளர்களை அமைதியாக இருக்க கோருகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சார்லூயிஸ் ஆலையில் உற்பத்தியை நிறுத்தப்போவதாக ஃபோர்டு உத்தியோகபூர்வமாக அறிவித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்துவிட்டது. இந்த நேரத்தில், தொழிற்சாலை தொழிற்சங்க குழுவும் IG Metall தொழிற்சங்கமும் அனைத்து வேலைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தை நாசப்படுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளன. இதற்கு எதிராக கிளர்ச்சி செய்யும் எவரும் பிளவை உண்டாக்குபவராக முத்திரை குத்தப்பட்டு, வரவிருக்கும் வரவிருக்கும் மோசமான பேச்சுவார்த்தை முடிவுக்கு பொறுப்பேற்க வைக்கப்படுவார்கள்.

ஜூன் 22, 2022 அன்று சார்லூயிஸ் ஆலை மூடலுக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஃபோர்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் [Photo: WSWS]

ஆரம்பத்தில் இருந்தே ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும்: ஃபோர்டிலும் அருகிலுள்ள விநியோக நிலையங்களிலும் 6,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்போது எதிர்கொள்ளும் பேரழிவு நிலைமைக்கு, மார்க்குஸ் தாலின் கீழ் உள்ள IG Metall உம், அதன் தொழிற்சாலை தொழிற்சங்க குழுவையும் தவிர வேறு யாரும் முக்கிய பொறுப்பை கொண்டிருக்கவில்லை.

2019 முதல், தொழிற்சாலை தொழிற்சங்க குழு ஒவ்வொரு வேலைக் குறைப்புக்கும் ஒப்புக்கொண்டதுடன், பதிலுக்கு தளத்தைப் பாதுகாக்குமாறு ஃபோர்டிடம் கோரியது. ஃபோர்டு அத்தகைய வாக்குறுதிகளை ஒருபோதும் வழங்கவில்லை என்றாலும், கடந்த மூன்று ஆண்டுகளில் 2,600 வேலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதன் பின்னர் ஃபோர்டு கடந்த ஆண்டு, சார்லூயிஸ் மற்றும் ஸ்பெயினின் வலென்சியாவில் உள்ள அல்முஸ்ஸாஃபேஸ் ஆலைகளுக்கு இடையே உள்-நிறுவன ஆட்குறைப்பு போட்டியைத் தொடங்கியபோது, தாலின் கீழ் உள்ள தொழிற்சாலை தொழிற்சங்க குழுவும் ஹோஸே லூயிஸ் பார்ராவின் கீழ் உள்ள ஸ்பானிய தொழிற்சாலை தொழிற்சங்க குழுவும் இரண்டு தொழிலாளர்களையும் பிரித்தன. ஆட்குறைப்பு போட்டியில் அவர்கள் விருப்பத்துடன் பங்கேற்று ஒருவரையொருவர் விஞ்சி குறைத்துக்கொள்ள முயன்றனர்.

பல மாதங்களாக, தாலையும் மற்றும் ஃபோர்டு பொது தொழிற்சாலை தொழிற்சங்க குழுவின் தலைவர் பெஞ்சமின் க்ருஷ்காவையும் சுற்றியுள்ள ஒரு சிறிய குழு, கொலோனில் நிர்வாகத்துடன் இணைந்து ஊழியர்களின் இழப்பில் உற்பத்திச் செலவைக் கடுமையாகக் குறைக்கும் திட்டங்களை வகுத்தது. பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற சாமானிய ஃபோர்டு தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

சார்லூயிஸில் 2025 இல் உற்பத்தியை முடிக்க சமீபத்தில் திட்டமிடப்பட்டதிலிருந்து, ஒரு உண்மையான தொழில்துறை போராட்டத்தின் வளர்ச்சியைத் தடுக்க தொழிற்சாலை தொழிற்சங்க குழு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. தொழிற்சாலை தொழிற்சங்க குழு நீண்ட காலத்திற்கு முன்பே அறிந்திருந்ததான அந்த மோசமான செய்தி வெளியிடப்பட்ட நாளில், நிறுவனத்தின் வாயில்களில் தொழிலாளர்களின் தன்னிச்சையான ஆக்கிரமிப்பு மற்றும் வேலைநிறுத்தத்தை தடுக்க ஆலைக்கு வெகு தொலைவில் ஒரு பாதிப்பில்லாத ஆர்ப்பாட்டத்தை அது ஏற்பாடு செய்தது.

இப்போது ஒரு மாதத்திற்கும் மேலாக, ஆலையின் எதிர்காலம் பற்றி அறியவிடாமல் தொழிற்சாலை தொழிற்சங்க குழு தொழிலாளர்களை இருளில் வைத்துள்ளது, மேலும் தொழிலாளர் எவரும் பணிநீக்க ஊதியம் பெற முடியாது என்பதை அது உறுதிசெய்து, அவர்களை ஆலையை முன்கூட்டியே விட்டுவிட கோரியது, அதேவேளை உற்பத்தி புள்ளிவிபரங்கள் உயர்வதை உறுதி செய்தது. நிறுவனத்தின் இலாப நலன்களுக்கு இந்த கோழைத்தனமான அடிபணிதல் தொழிலாளர்கள் இன்று எதிர்கொள்ளும் அவலத்தை உருவாக்கியுள்ளது.

தொழிற்சாலை தொழிற்சங்க குழு அதன் கடைசி இரண்டு தகவல் துண்டுப் பிரசுரங்களில், அதே பாணியில் தொடர விரும்புவதாக இப்போது அறிவித்துள்ளது. துண்டுப் பிரசுரங்கள் தொழிற்சாலை தொழிற்சங்க குழுவின் திவால் நிலைக்கான ஒரு அறிவிப்பாகும், எனவே இதை, தங்களை விற்க அனுமதிக்காமல் எழுந்து நிற்பதற்கான அழைப்பாக தொழிலாளர்களால் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

அதன் ஜூலை 12 துண்டுப் பிரசுரத்தில், தாலும் அவரது தொழிற்சாலை தொழிற்சங்க குழு உறுப்பினர்களும் தாம் அறியாததாகக் கூறும் அனைத்து விஷயங்களையும் பட்டியலிட்டுள்ளனர்: ஆலைக்கு சாத்தியமான முதலீட்டாளர் இருக்கிறார்களா, சாத்தியமான விற்பனை எவ்வாறு கட்டமைக்கப்படும், ஃபோர்டு என்ன திட்டமிடுகிறது, சார்லாந்து சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மாநில அரசாங்கம் என்ன திட்டமிட்டது 'எப்போது இருந்து, எந்த அளவிற்கு ஒரு சமூகத் திட்டம் அவசியம்' மற்றும் 'அதிகம், அதிகம், இன்னும்.'

வெளிப்படையாகக் கூறினால், ஆலையை மூடுவது தவிர்க்க முடியாதது என்று தொழிற்சாலை தொழிற்சங்க குழு நம்புகிறது, மேலும் இது எப்படி இருக்க வேண்டும், எப்படி நடக்க வேண்டும் என்ற கேள்விக்கு மட்டுமே அக்கறை கொண்டுள்ளது; ஏனெனில் விற்பனையை ஒழுங்கமைப்பதற்கு அதுதான் பொறுப்பு என உணர்கிறது.

ஃபோர்டு நிர்வாகம் “எதிர்காலத்திற்கான அதன் சொந்த வலுவான முன்னோக்குகளை நிரூபிக்க முற்றிலும் கடமைப்பட்டுள்ளது மற்றும் மூன்றாம் தரப்பினருக்கு பொறுப்பை மாற்றக்கூடாது” என்பதை கடந்த வாரத்தின் இரண்டு துண்டுப் பிரசுரங்களும் வலியுறுத்துகின்றன. ஜூலை 15 துண்டுப் பிரசுரத்தில், உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ள ஃபோர்டு நிர்வாகம், தொழிலாளர்களைப் பற்றி கவலை கொண்டுள்ளது என அனைத்து தீவிரத்தன்மையிலும் தொழிற்சாலை தொழிற்சங்க குழு கூறுகிறது.

இது 'சார்லூயிஸில் ஒரு படத்தை உருவாக்கியுள்ளது, தொழிலாளர்களை எது முன்நகர்த்துகிறது மற்றும் அவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது' என்று தொழிற்சாலை தொழிற்சங்க குழுவின் தகவல் கூறுகிறது. ஃபோர்டின் ஐரோப்பிய நிர்வாகத்தின் பிரதிநிதிகளும் மற்றும் ஜேர்மன் நிர்வாகத்தின் தலைவர் மார்டின் சாண்டரும், சார்லூயிஸில் இருந்தனர், மற்றும் 'சில மேலாளர்களுடன் (management, AT, foreman, HR level) தகவல் கூட்டங்களையும் கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளனர்.” எதிர்காலத்தில், தொழிற்சாலை தொழிற்சங்க குழுவும் மற்றும் மூன்று மேலாளர்களும் ‘எதிர்கால சார்லூயிஸ்’ பணிக் குழுவாக ‘வாராந்திர, குறிப்பிட்ட தேதிகளிலான கூட்டங்களை’ நடத்துவார்கள்.

இதற்கிடையில், ‘ஆலையில் நிலவும் ஒரு பகுதி வெடிக்கும் மனநிலையை’ மேற்கோள் காட்டி, இந்த பணிக்குழுவில் அது பங்கேற்காது என தொழிற்சாலை தொழிற்சங்க குழு அறிவித்துள்ளது. ஆனால் அது நிர்வாகத்துடன் தொடர்ந்து பணியாற்றுகிறது என்ற உண்மையை மாற்றவில்லை.

ஃபோர்டு நிர்வாகத்துக்கு இவ்வாறு முழுமையாக கீழ்ப்படிதல் ஆலையின் கலைப்புக்குத்தான் வழிவகுக்கும். தொழிற்சாலை தொழிற்சங்க குழுவும் IG Metall தொழிற்சங்கமும் ஐரோப்பிய நிர்வாகத்தின் நோக்கங்களை அவர்கள் விரும்பும் பலவித வண்ணங்களில் வரைய முடியும், ஆனால் முதலாளித்துவத்தின் கீழ் நிர்வாகம் உரிமையாளர்களுக்கு –அதாவது பங்குதாரர்களுக்கு– கடமைப்பட்டுள்ளதே தவிர தொழிலாளர்களுக்கு அல்ல.

ஃபோர்டு மட்டுமல்ல, ஏனைய அனைத்து சர்வதேச வாகன உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களின் கடின உழைப்பால் உருவான கடந்த கால சாதனைகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடிகாரத்தை நூறு ஆண்டுகள் பின்னோக்கி திருப்ப வேண்டும். எட்டு மணிநேர வேலை, போதுமான ஊதியம், ஊதியத்துடன் கூடிய விடுமுறைகள், ஊதியத்துடன் மருத்துவ விடுப்பு, தொழில் பாதுகாப்பு மற்றும் பல நலன்கள் இப்போது தாக்குதலுக்குள்ளாகின்றன. அமெரிக்காவில், வாகன நிறுவனங்களும் ஐக்கிய வாகன தொழிலாளர்கள் (UAW) தொழிற்சங்கமும் ஏற்கனவே இந்த நலன்களை அகற்றியுள்ளன.

தொற்றுநோய்களின்போது, பல தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கை, தங்கள் ஆரோக்கியம் மற்றும் கடுமையான ஊதிய இழப்புக்களுடன் பெருநிறுவனங்களின் ‘உயிர்களை விட இலாபங்களுக்கே முன்னுரிமை’ கொள்கைக்காக விலை கொடுத்துள்ளனர். இப்போது, அதிகரித்து வரும் பணவீக்கத்துடன், மேலும் வியத்தகு சுமைகள் அவர்களின் மீது வீழ்கின்றன. பணவீக்கம் என்பது, நிதிச் சந்தைகளுக்கு டிரில்லியன் டாலர் பரிசுகள், இராணுவ மறுசீரமைப்பு செலவுகள் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ தாக்குதலின் விளைவுகள் ஆகிய வகைகளில் உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டு வருகின்றது.

தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வரும் அதேவேளையில், பங்குதாரர்களின் அதிர்ஷ்டமும் மேலாளர்களின் பல மில்லியன் யூரோ சம்பளங்களும் இடைவிடாமல் அதிகரித்து வருகின்றன. இது ஃபோர்டு நிறுவனத்திற்கும் பொருந்தும். இந்நிறுவனத்தின் உலகளாவிய தலைவராக ஜிம் ஃபார்லே அக்டோபர் 2020 இல் பொறுப்பேற்றதிலிருந்து, முழு உற்பத்தி செயல்முறையும் மறுசீரமைக்கப்பட்டு, கடைசி அவுன்ஸ் இலாபம் வரை தொழிலாளர்களிடமிருந்து பிழிந்தெடுக்கப்பட்டது. இலாபங்கள் அதிகரித்து வருகின்றன, 2026 முதல் –அதாவது சார்லூயிஸ் ஆலை மூடப்பட்ட பின்னர்– ஃபார்லே 10 சதவிகிதம் செயல்பாட்டு வருவாயை அடைய விரும்புகிறார்.

IG Metall உம் சார்லூயிஸ் மற்றும் கொலோனில் உள்ள அதன் தொழிற்சாலை தொழிற்சங்க குழுக்களும், ஜேர்மனியில் அதன் இலக்குகளை ஃபோர்டு அடைவதற்கு எப்போதும் ஆதரவளித்தன. 1973 ஆம் ஆண்டில், கொலோனில் உள்ள ஃபோர்டு ஆலையில் 20,000 தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு, முன்னறிவிப்பு இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்ட 300 சக ஊழியர்களைப் பாதுகாக்கவும், சிறந்த வேலை நிலைமைகளுக்காகப் போராடவும் ஆலை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் செய்தபோது, IG Metall உம் தொழிற்சாலை தொழிற்சங்க குழுவும் அவர்களின் முதுகில் குத்தியது.

அப்போதிருந்து, நிறுவனம் தொழிலாளர்கள் மீதான புதிய தாக்குதல்களுக்கு திட்டமிடுகையில், IG Metall தொழிற்சங்கத்தையும், அதன் தொழிற்சாலை தொழிற்சங்க குழு பிரதிநிதிகளையும் எப்போதும் அது நம்ப முடிகிறது. அவர்கள் வெற்றி பெற்றால், நிறுவனம் அதே வழியில் தொடரும். அவர்களின் கேள்விகளுக்கு நிர்வாகம் பதில் அளிக்கவில்லை என அவர்கள் புலம்புவதன் அர்த்தம் இதுதான். அவர்கள் நிர்வாகத்துடன் தொடர்ந்து ஒத்துழைத்து பணியாற்ற விரும்புகிறார்கள். இந்த வர்க்க ஒத்துழைப்பைத் தவிர வேறு எதையும் அவர்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது.

எவ்வாறாயினும், தொழிலாளர்களின் உரிமைகளும் மற்றும் சமூக சாதனைகளும் மூடிய அறை பேச்சுவார்த்தைகள் மூலம் பெறப்படதல்ல, மாறாக முதலாளித்துவத்திற்கு எதிராக ஐக்கியப்பட்ட ஒரு கூட்டுப் போராட்டத்தில் தான் பெறப்பட்டது. ஏனெனில் இது தொழிலாளர்களின் நனவில் ஆழமாக பதிந்துவிட்டது, சார்லூயிஸில் உள்ள தொழிலாளர் குழு இப்போது அதற்கு எதிரான எந்த எதிர்ப்பையும் 'ஒற்றுமை இல்லாமை' மற்றும் 'பிளவுபடுத்தும்' என்று இழிவுபடுத்துகிறது.

கடந்த செவ்வாய்கிழமை துண்டுப் பிரசுரத்தில், தொழிலாளர்கள் தங்களை ‘பிரிப்பதற்கு’ அனுமதிக்கக் கூடாது என்று அது கூறுகிறது. அதாவது, முன்னெப்போதையும் விட “நாம் ஒன்றாக ஒட்டிக் கொள்வதும், எந்தவொரு வெளிப்புற அல்லது உட்புற செல்வாக்கும் நம்மைப் பிரிக்க அனுமதிக்காமல், ஒருவருக்கொருவர் நியாயமான மற்றும் கண்ணியமான முறையில் நடந்துகொள்வதும்” மிகவும் முக்கியம் என்று தெரிவிக்கிறது. ‘உள் ஒற்றுமையின் முறிவு’ என்பது வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களின் விளைவு ‘அனைவருக்கும் மோசமானதாக இருக்கும்’ என்று அது கூறுகிறது. ‘நாம் அனைவரும் அதை அறிந்திருக்க வேண்டும்!’ என்று தொழிற்சாலை தொழிற்சங்க குழு எச்சரிக்கிறது. “எதிர்ப்பாளர் கொலோனில் உள்ளனர், அவர்கள் ஃபோர்டு ஐரோப்பிய நிர்வாகம் என்று அழைக்கப்படுகின்றனர்.”

மொழிபெயர்த்தால் அதற்கு என்ன அர்த்தம்? பெருநிறுவனத்திற்கு முன்பான தனது இழிவான நடவடிக்கைக்கு ஒத்துப்போகுமாறு தொழிலாளர்களை தொழிற்சாலை தொழிற்சங்க குழு கோருகிறது. தொழிற்சாலை தொழிற்சங்க குழுவிற்கும் ஃபோர்டு ஐரோப்பிய நிர்வாகத்திற்கும் இடையிலான கூட்டுப் பேச்சுக்களை தொழிலாளர்கள் நம்ப வேண்டும் என்கிறது. அதற்கு உடன்படாதவர்கள் தொழிலாளர்களை பிரிப்பவர்களாகக் கருதப்படுவார்கள், எனவே அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என மிரட்டுகிறது.

ஆனால் உண்மையில் தொழிற்சாலை தொழிற்சங்க குழு தான் தொழிலாளர்களை பிளவுபடுத்துகிறது. இந்நிலையில், அனைத்து ஆலைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு இடையேயான சர்வதேச ஒத்துழைப்பு மட்டுமே உலகளவில் இயங்கும் நிறுவனத்திற்கு எதிராக வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூக சாதனைகளைப் பாதுகாக்க முடியும் என்பது வெளிப்படையானது. ஆனால் IG Metall தொழிற்சங்கமும் தொழிற்சாலை தொழிற்சங்க குழுவும் இதை வெளிப்படையாக நிராகரிக்கின்றன. ஆட்குறைப்பு போட்டியில் அவர்கள் பங்கேற்பது இதற்கு மிகவும் மோசமான ஆதாரம் மட்டுமே.

பல வருட அனுபவத்தில் இருந்து, சார்லூயிஸில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், தொழிற்சாலை தொழிற்சங்க குழு நுட்பமான மற்றும் குறைந்த நுட்பமான மிரட்டல் மற்றும் தண்டனை முறைகளை பிரயோகித்து தொழிலாளர்களை பெருநிறுவனத்திற்கு எவ்வாறு அடிபணியச் செய்கிறது என்பதை அறிந்திருக்கிறார்கள். எனவே, தொழிற்சாலை தொழிற்சங்க குழுவின் சூழ்ச்சிகளில் இருந்து தொழிலாளர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, விசாரிக்கப்படும் சக ஊழியர்களுக்கு, ஃபோர்டு நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்கள் உறுதியளிக்க வேண்டும்.

ஃபோர்டு சார்லூயிஸ் தொழிலாளர்களுக்கு, IG Metall மற்றும் தொழிற்சாலை தொழிற்சங்க குழுவில் இருந்து சுயாதீனமாக ஒழுங்கமைப்பதைத் தவிர வேறு வழியில்லை. அவர்களின் கூட்டாளிகள் ஃபோர்டு நிர்வாகம் அல்ல, மாறாக ஸ்பெயின், இந்தியா, துருக்கி, ருமேனியா, அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் உள்ள அவர்களின் சக தொழிலாளர்களாவர். அனைத்து வேலைகளையும் வேலை நிலைமைகளையும் பாதுகாக்க அவர்களுடன் தொடர்பு கொள்ளப்பட வேண்டும்.

எனவே, தங்கள் ஆலைக்காக போராடத் தயாராக இருக்கும் சார்லூயிஸில் உள்ள அனைத்து ஃபோர்டு தொழிலாளர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்: ஜூலை 28 ஆம் தேதி நடக்கவிருக்கும் பணிகள் கூட்டத்தில், உங்கள் சார்பாக பேசுவதற்கான தொழிற்சாலை தொழிற்சங்க குழுவின் ஆணையை இரத்து செய்யுங்கள். அது தனக்காகவும், தொழிற்சங்கம் மற்றும் நிர்வாகத்திற்காகவும் தான் பேசுகிறது, உங்களுக்காக அல்ல. நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தைக்கு நாடாத உங்கள் சொந்த சுயாதீன பிரதிநிதித்துவத்தைத் தேர்ந்தெடுங்கள், மற்றும் சர்வதேச அளவில் ஃபோர்டு தொழிலாளர்களுடன் இணைந்து கூட்டு நடவடிக்கை மற்றும் போராட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்ய முற்படுங்கள்.

ஃபோர்டு நடவடிக்கைக் குழுவை +491633378340 என்ற வார்ட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

Loading