முன்னோக்கு

வோல் ஸ்ட்ரீட் பங்குச் சந்தை வீழ்ச்சியானது நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தை அம்பலப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

வோல் ஸ்ட்ரீட் மற்றும் உலகளாவிய சந்தைகளின் ஏற்ற இறக்கங்கள், அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் பிற மத்திய வங்கிகளில் இருந்து மலிவு பணம் உட்செலுத்தப்பட்டதால் நிலைநிறுத்தப்பட்ட ஊகவணிகம் மற்றும் நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தால் ஏற்பட்ட உலக நிதியியல் அமைப்புமுறையின் தீவிர பலவீனமான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

திங்களன்று ஜப்பானில் இன்னும் கூடுதலான பங்குச் சந்தை வீழ்ச்சியுடன் தொடங்கியதுடன், அங்கு டோக்கியோ சந்தை மிக உயர்ந்த மட்டத்தில் ஊக வணிகம் செய்யப்பட்டது. 1987 அக்டோபர் சரிவுக்குப் பின்னர் வெள்ளியன்று மிக மோசமான நாளைக் கண்ட நிக்கேய் 225 குறியீடு (Nikkei 225 index) இன்னும் 5.9 சதவீதம் சரிந்தது. இது கடந்த மாதத்தில் அதன் எல்லா நேர உயர்வையும் விட இப்போது 20 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. வெள்ளிக்கிழமை 4,451 புள்ளிகளுக்கும் அதிகமான வீழ்ச்சி அதன் வரலாற்றில் புள்ளி அடிப்படையில் மிகப் பெரியதாகும்.

மக்கள் ஜூலை 30, 2024 அன்று நியூயார்க் பங்குச் சந்தையை கடந்து செல்கிறார்கள்.  [AP Photo/Peter Morgan]

ஒன்றரை தசாப்தங்களுக்கும் மேலாக நிலவி வந்த பூஜ்ஜிய வட்டி விகித கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, வட்டி விகிதங்களை சாதகமான பகுதிக்கு உயர்த்த கடந்த வாரம் பேங்க் ஆஃப் ஜப்பான் எடுத்த முடிவுக்கு விடையிறுப்பாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டது.

வோல் ஸ்ட்ரீட் வெள்ளியன்று ஒரு கணிசமான விற்பனையை அனுபவித்தது, அதைத் தொடர்ந்து திங்களன்று காலை ஊக வணிகம் தொடங்கியபோது ஒரு திடீரென சரிவு ஏற்பட்டது, இது ஜூலை மாதத்தில் சந்தையை சாதனை உயரங்களுக்கு இட்டுச் சென்ற உயர் தொழில்நுட்பத் துறையில் மிகவும் கூர்மையாக வெளிப்பட்டது. பிற்பகலில் பங்குகள் ஓரளவு மீட்கப்பட்டன, ஆனால் அனைத்து துறைகள் முழுவதும் வீழ்ச்சியடைந்தன. டோவ் 1,000 புள்ளிகளுக்கும் மேலாக சரிந்து, நாள் முடிவில் 2.6 சதவிகிதம் சரிந்தது. NASDAQ 3.43 சதவீதம் சரிந்தது, S&P 500 3 சதவீதம் சரிந்தது. Dow மற்றும் S&P 500 க்கு, இது செப்டம்பர் 2022 க்குப் பிறகு அவைகளின் மிகப் பெரிய சரிவாகும்.

இந்த வீழ்ச்சிகளானது ஊகத்தின் இலக்காக இருந்த உயர் தொழில்நுட்ப பங்குகளில் குவிந்திருந்தன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஜூலை வரையில், ஆப்பிள், மைக்ரோசாப்ட், ஆல்பாபெட் (கூகுளின் தாய் நிறுவனம்), டெஸ்லா, மெட்டா (பேஸ்புக்கின் தாய் நிறுவனம்) மற்றும் என்விடியா என அழைக்கப்படும் விரல்விட்டு எண்ணக்கூடிய நிறுவனங்கள் S&P 500 குறியீட்டின் அதிகரிப்பில் 52 சதவீதத்தைக் கொண்டிருந்தன.

15,000 வேலைகளை வெட்டும் முடிவின் பின்னணியில் வெள்ளிக்கிழமை அதன் பங்குகள் 26 சதவீதம் சரிவைக் கண்ட இன்டெல் தவிர, செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சிப்சுகளைத் தயாரிக்கும் என்விடியா கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன் பங்குகள் வர்த்தகம் தொடங்கியபோது 15 சதவிகிதம் சரிந்தன, பின்னர் சிறிது நேரம் மீள்ச்சியடைந்ததன் பின்னர் 6 சதவிகிதம் குறைந்தது. ஜூன் மாத உச்சத்தை எட்டியதில் இருந்து நிறுவனத்தின் பங்குகள் சுமார் 30 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளன.

பெர்க்ஷயர் ஹாத்வே (Berkshire Hathaway) நிதியத்தின் தலைவர் வாரன் பஃபெட் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தில் தனது பாதி பங்குகளை 76 பில்லியன் டாலர்களுக்கு விற்றுவிட்டதாகவும், பணத்தை அரசாங்கக் கடனுக்கு மாற்றியதாகவும் அறிவித்ததைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனமும் ஒரு பாதிப்பை சந்தித்தது.

வோல் ஸ்ட்ரீட்டின் “அச்ச அளவீடு” என்று அழைக்கப்படும் விக்ஸ் ஏற்ற இறக்க குறியீட்டில் (Vix volatility index) தொடர்ச்சியான கொந்தளிப்பின் எதிர்பார்ப்புகள் பிரதிபலிக்கின்றன, இது சமீபத்திய வாரங்களில் ஒற்றை இலக்க மட்டங்களுடன் ஒப்பிடுகையில் காலையில் 65 ஆக உயர்ந்தது.

இந்த பங்குச் சந்தை வீழ்ச்சியினை உருவாக்க பல காரணிகள் ஒன்றிணைந்துள்ளன. செயற்கை நுண்ணறிவு குமிழி வெடிப்பதுவும், ஜப்பானிய யென்னை அடிப்படையாகக் கொண்ட “முன்னெடுத்துச் செல்லும் வர்த்தகம்” என்றழைக்கப்படுவதற்கு ஒரு குறிப்பிடத்தக்க அடிவிழுந்ததும் மற்றும் அமெரிக்க பொருளாதாரம் ஒரு பெரு மந்தநிலைக்குள் நகர்ந்து கொண்டிருக்கக்கூடும் என்ற அச்சம் ஆகியவைகளும் இதில் உள்ளடங்குகின்றன.

செயற்கை நுண்ணறிவின் அபிவிருத்தியானது தொழில்நுட்பத்திலும் உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தியிலும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. ஆனால் இதுபோன்ற அனைத்து முன்னேற்றங்களையும் போலவே —”தொழில்நுட்ப சிதைவு” என்றழைக்கப்படுவதில் உச்சக்கட்டத்தை அடைந்த 2000 களின் ஆரம்ப இணையக் குமிழியை ஒருவர் நினைவுகூர முடியும்— இதுவும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம் குறித்த மிகைப்படுத்தப்பட்ட கூற்றுக்களின் அடிப்படையிலான பரவலான ஊகங்களுடன் சேர்ந்துள்ளதுடன், ஊக ஆதாயங்களை இழக்க நேரிடும் என்ற அச்சத்தின் அடிப்படையில் உயர் தொழில்நுட்ப துறையில் பங்குகளை கையகப்படுத்துவதற்கு வெள்ளமென பணம் பாய்ந்துள்ளது.

நிதியியல் அமைப்புமுறையின் பூகோளரீதியில் ஒன்றோடொன்று இணைந்த தன்மையின் ஒரு எடுத்துக்காட்டாக, நாணயச் சந்தைகளில் யென்னின் சரிவைத் தடுக்கும் முயற்சியாக வட்டிவிகிதங்களை உயர்த்துவதற்கான பேங்க் ஆஃப் ஜப்பானின் முடிவு நேரடியாக வோல் ஸ்ட்ரீட்டிற்குள் பாய்ந்தது. சமீபத்திய நாட்களில் டாலருக்கு எதிராக யென்னின் மதிப்பு 11 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது —ஜூலை தொடக்கத்தில் டாலருக்கு 161.96 ஆக இருந்ததில் இருந்து நேற்று 143.46 ஆக உயர்ந்துள்ளது— வட்டி விகித வேறுபாடு உத்தி வணிகத்திற்கு (carry trade) ஒரு அடியைக் கொடுத்தது, இதில் முதலீட்டாளர்கள் அமெரிக்க சந்தைகளில் முதலீடு செய்ய ஜப்பானில் கடன் வாங்குகின்றனர், அங்கு அவர்கள் அதிக வட்டி விகிதத்தை அனுபவிக்க முடியும்.

ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள ஒரு பகுப்பாய்வின்படி, சரியான அளவு எண்ணிக்கை கிடைக்கவில்லை என்றாலும், உயர் தொழில்நுட்ப பங்குகளில் அவற்றை சாதனை உயரத்திற்கு அனுப்பிய முதலீட்டின் பெரும்பகுதி வட்டி விகித வேறுபாடு உத்தி வணிகங்களால் (carry trade) நிதியளிக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. 2021 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து எல்லை தாண்டிய யென் கடன் 742 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச தீர்வுகளுக்கான வங்கி (The Bank for International Settlements) மதிப்பிட்டுள்ளது.

சொசைட்டி ஜெனரல் (Société Générale) பிரெஞ்சு வங்கியின் தலைமை அந்நிய செலாவணி மூலோபாய வல்லுனர் கிட் ஜக்ஸ் வெளியிட்ட குறிப்பு ஒன்று இந்த நிகழ்ச்சிப்போக்கை சுட்டிக்காட்டியது. அதாவது “கொந்தளிப்பை ஏற்படுத்தாமல் உலகம் இதுவரை கண்டிராத மிகப் பெரிய பெரும்பகுதி வட்டி விகித வேறுபாடு உத்தி வணிகத்தை (carry trade) நீங்கள் மாற்றியமைக்க முடியாது” என்று அவர் எழுதினார்.

மற்றொரு காரணி, அமெரிக்காவில் பெருமந்தநிலை பற்றிய பெருகிய அச்சம் ஆகும். இது வெள்ளியன்று வெளியிடப்பட்ட அமெரிக்க வேலைகள் அறிக்கையால் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் புதிய வேலைகளின் எண்ணிக்கை 114,000 என்று அது காட்டியது, இது எதிர்பார்த்த 175,000 ஐ விட மிகக் குறைவு ஆகும். இதனுடன் வேலையின்மை விகிதம் 4.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. அந்த அதிகரிப்பு விகிதத்தில் உயர்வை அதன் முந்தைய குறைந்த அளவிலிருந்து 0.6 சதவீதத்திற்கு கொண்டு வந்தது, இது சாஹ்ம் விதி என்று அழைக்கப்படுவதை நோக்கி கவனத்தை திருப்பியது, இது மூன்று மாத நகரும் சராசரி முந்தைய 12 மாதங்களில் அதன் குறைந்த புள்ளிக்கு குறைந்தபட்சம் அரை சதவீத புள்ளியை விட நகரும் போது மந்தநிலையைக் குறிக்கிறது.

கடன் வாங்குவதை மலிவானதாக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்ற நிதியியல் முதலீட்டாளர்களின் வலுவான கோரிக்கையை பங்கு சந்தை வீச்சியைப் பிரதிபலிக்கிறது, இது கடந்த புதன்கிழமை நடப்பு விகிதங்களைப் பராமரிக்க பெடரலின் முடிவின் மீது அதிருப்தியை வெளிப்படுத்துகிறது. ஆரம்பத்தில் சந்தைகளால் சாதகமாக வரவேற்கப்பட்ட செப்டம்பரில் விகிதங்களைக் குறைப்பதற்கான பெடரலின் தெளிவான சமிக்ஞை, இப்போது போதுமானதாக இல்லை என்று கருதப்படுகிறது.

உலகளாவிய அழைப்பாக இருப்பது: எங்களுக்கு அதிக பணம் கொடுங்கள்.

வீழ்ச்சியைத் தூண்டிய உடனடி பிரச்சினைகளைத் தவிர, மற்ற சக்திவாய்ந்த சக்திகளும் செயலாற்றி வருகின்றன. கடந்த வாரம் ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா தலைவர்களை இஸ்ரேல் நடத்திய படுகொலைகளுடன், மத்திய கிழக்கில் ஒரு முழு அளவிலான போருக்கான வாய்ப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.

நிதியச் சந்தைகளை மிஞ்சி தொங்கிக் கொண்டிருப்பது அமெரிக்கப் பொதுக் கடன் விரிவாக்கம் ஆகும், இது இப்போது சுமார் 35 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கிறது என்பதோடு, அமெரிக்க கருவூலம் மற்றும் பெடரல் இரண்டுமே “தாக்குப்பிடிக்க முடியாததாக” செல்லும் ஒரு விகிதத்தில் அதிகரித்து வருகிறது.

நிகழ்வுகளின் சரியான போக்கை கணிப்பது சாத்தியமில்லை, ஆனால் போக்குகள் தெளிவாக உள்ளன. அமெரிக்காவும் உலக நிதிய அமைப்புமுறையும் ஒரு ஆட்டங்காணும் அஸ்திவாரத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது, அவை உறுதியற்றதாக தோன்றும் சிறிய அபிவிருத்திகளாலேயே கூட ஒரு நெருக்கடிக்குள் தள்ளப்படலாம்.

ஒரு நெருக்கடிக்கு ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பு என்னவாக இருக்கும் என்பதில் எந்த கேள்விக்கும் இடமில்லை. 2008 மற்றும் 2020 கசப்பான அனுபவங்கள் காட்டுவதைப் போல, அது தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவதாக இருக்கும்.

2008 இல், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் அவர்களின் வேலைகளை இழந்துள்ளனர், ஊதியங்கள் வெட்டப்பட்டன, வீடுகள் மீண்டும் கையகப்படுத்தப்பட்டன, அதேவேளையில் நெருக்கடியைத் தூண்டிய நடவடிக்கைகளான பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு, அரசாங்கத்திடம் இருந்து பில்லியன் கணக்கான டாலர்கள் உதவித் தொகைகளும் மற்றும் பெடரல் விநியோகித்த மலிவு பணமும் வெகுமதியாக வழங்கப்பட்டன. 2020 இல், கோவிட்-19 தாக்கியபோது, பெடரல் மீண்டும் மிகவும் மலிவாக பணத்தை வழங்கியதால், அரசாங்கத்தின் உதவிகள் பெருநிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டது, இது வைரஸை அகற்ற அர்த்தமுள்ள பொது சுகாதார நடவடிக்கைகளை எடுக்க மறுத்ததன் மத்தியில் மேலதிக ஊக வணிகத்திற்கான எரிபொருளை வழங்கியது.

அது எவ்வளவுதான் அபிவிருத்தி அடைந்தாலும், சமீபத்திய கொந்தளிப்பானது முதலாளித்துவ அமைப்புமுறையின் கட்டமைப்பின் உள்ளார்ந்த நெருக்கடியின் மற்றொரு வெளிப்பாடாகும். அது அன்றாடம் தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு வாள் போல் தொங்கிக் கொண்டிருக்கிறது, அது சமூகப் பேரழிவைக் கொண்டு அச்சுறுத்துவதுடன், சோசலிசத்திற்கான ஒரு அரசியல் போராட்டத்தின் புறநிலை அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Loading