முன்னோக்கு

வலதுசாரி பிரெஞ்சு அரசாங்கத்தை அமைப்பதற்கான மக்ரோனின் நகர்வுகள் புதிய மக்கள் முன்னணியின் திவால்நிலையை அம்பலப்படுத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஜூலை 7 பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை காலில் போட்டு மிதித்துவரும் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், ஒரு வலதுசாரி அரசாங்கத்தை அமைக்க தயாராகி வருவதாக, இவ்வாரம் வெளியான பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. மக்ரோனின் கொள்கைகளுக்கும் அதிவலது தேசிய பேரணிக்கும் (RN) எதிர்ப்புக்கள் அதிகரித்து வருவதன் மத்தியில், ஜோன்-லூக் மெலோன்சோனின் புதிய மக்கள் முன்னணி (NFP) தேர்தலில் வெற்றி பெற்றது. இருப்பினும், வலதுசாரி அரசியல்வாதி சேவியர் பெர்ட்ராண்டை (Xavier Bertrand) பிரதமராக நியமிப்பது குறித்து மக்ரோன் இன்னும் பரிசீலித்து வருகிறார்.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் 2024 ஜூலை 27, 2024 சனிக்கிழமை பிரான்சின் பாரிஸில் நடைபெறும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது பொலிசாரை சந்திக்கிறார். [AP Photo/Yves Herman]

முந்தைய வலதுசாரி அரசாங்கங்களின் கீழ், சுகாதார மற்றும் தொழிற்துறை மந்திரியாக இருந்த பெர்ட்ரான்ட் அனுப்பிய நெருங்கிய கூட்டாளிகளுடன் மக்ரோன் பெர்ட்ரானை பிரதமராக தேர்ந்தெடுக்கும் சாத்தியக்கூறை விவாதித்ததாக நேற்று லு பிகாரோ (Le Figaro) பத்திரிகை செய்தி வெளியிட்டது. “அவர் எப்படி இருக்கிறார்?” என்று மக்ரோன் அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், “அவர் சவாலை ஏற்க தயாராக இருக்கிறார் “ என்று பதிலளித்தனர்.

இத்திட்டங்கள் மக்களுக்கு எதிரான, எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு சதிக்கு நிகரானதாகும். பாரிஸ் ஒலிம்பிக்கிலும், பிரெஞ்சு கோடை விடுமுறையின் உச்சத்திலும் ஊடகங்கள் முழுக்க முழுக்க கவனம் செலுத்தி வரும் நிலையில், வெகுஜனங்களின் முதுகுக்குப் பின்னால் இந்த திட்டங்கள் விவாதிக்கப்படுகின்றன. ஆனால் மக்ரோனின் கட்சி தேசிய பாராளுமன்றத்தில் ஒரு சிறிய சிறுபான்மையாக குறைக்கப்பட்ட பின்னரும் மற்றும் அவரது கொள்கைகள் பெரும்பான்மையான பிரெஞ்சு மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னரும் கூட, ஜூலை 7 தேர்தலுக்கு முன்னர் இருந்த அதே சக்திகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான நகர்வுகள் இடம்பெற்று வருகின்றன.

எவ்வாறிருப்பினும், இந்த சதிக்கு முக்கிய உறுதுணையாக இருப்பவர்கள் ஜோன்-லூக் மெலோன்சோனும் அவரது NFP கூட்டணியும் ஆகும். 2022 ஜனாதிபதி மற்றும் 2024 பாராளுமன்றத் தேர்தல்களில் பெரும்பான்மையான நகர்ப்புற தொழிலாள வர்க்கத்தின் வாக்குகளை பெற்ற பின்பு, பாராளுமன்றத்தில் NFP மிகப்பெரிய வாக்குகளைக் கொண்ட அணியாகவுள்ளது. ஆயினும் கூட, மக்ரோனின் வலதுசாரி சதியை வீழ்த்துவதற்கு, அணிதிரளவும் வேலைநிறுத்தம் செய்யவும் அதன் மில்லியன் கணக்கான தொழிலாள வர்க்க வாக்காளர்களுக்கு அழைப்பு விடுக்க முற்றிலும் NFP தகைமையற்றுள்ளதுடன், விருப்பமற்றுள்ளது என்பதை நிரூபித்துள்ளது.

மாறாக, மக்ரோனின் பிற்போக்குத்தனமான சூழ்ச்சிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில், NFP முற்றிலும் பயனற்றது என்பதை நிரூபித்துள்ளது. கடந்த ஜூலை முதல் மெலன்சோன் தனது வலைப்பதிவில் ஒரு ட்வீட் அல்லது அறிக்கையைக்கூட வெளியிடவில்லை. பெர்ட்ராண்ட் மற்றும் மக்ரோனின் சூழ்ச்சிகளை விமர்சிக்கும் பணியை ஒருமனதாக, மக்ரோனுக்கு பிரதம மந்திரிக்கான முன்மொழிவாக NFP ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், அரசியல் அல்லாதவருமான 37 வயதான நிதியமைச்சக அதிகாரத்துவவாதியான லூசி காஸ்டெட்ஸிடம் (Lucie Castets) விட்டு விட்டது.

இவ்வாறு அரசியல் களத்தைக் கைவிடுவதன் மூலமாக, ஒரு சட்டவிரோதமான, வன்முறையான வலதுசாரி அரசாங்கமாக இருக்கக்கூடிய ஒன்றை அமைப்பதுக்கு மக்ரோனுக்கு NFP பாதையை திறந்து வைத்துள்ளது. வலதுசாரி ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் கீழ், முன்னாள் தொழிற் துறை அமைச்சராக இருந்த பெர்ட்ராண்ட், சிக்கன நடவடிக்கைகள், பொலிஸ்-அரசு ஒடுக்குமுறை மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதல்களின் ஒரு திட்டநிரலைப் பின்தொடர்வார். அதேவேளையில் மக்ரோன் நேட்டோவின் சர்வதேசப் போர்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

மக்ரோனுடன் திரைக்குப் பின்னால் நடந்த பேச்சுவார்த்தைகளில் பெர்ட்ரான்ட் தன்னை ஒரு சாத்தியமான பிரதம மந்திரியாகக் காட்டிக் கொள்ள முயற்சித்ததைப் பற்றி Le Figaro பின்வருமாறு எழுதுகிறது:

[அவர்], கலே பிராந்தியத்தின் தலைவராக இருந்து, [சோசலிஸ்ட் கட்சி] உள்துறை மந்திரி பேர்னார்ட் கஸ்னேவ்வுடன் இணைந்து பணியாற்றிய சமயத்தில், 2016 இல் கலேயில் இருந்த ஜங்கிள் [புலம்பெயர்ந்தோர் முகாம்] மூடப்பட்டது என்பதை அவர் நினைவு கூர்ந்தார். அவ்ரோஸ் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளிக்கான அரசு ஒப்பந்தங்கள் வெட்டப்பட்டதும் அவ்வாறே நடந்தது. இராணுவ-பொலிஸ் பிரச்சினைகளில், அவர் “பலவீனமான ஒருமித்த கருத்தை” ஊக்குவிக்கவில்லை என்பதை இது காட்டுகிறது. அவர் இப்போது வலது மற்றும் இடது, வர்த்தக வட்டாரங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மத்தியில் பல தொடர்புகளை ஏற்படுத்தி வருகிறார்.

மக்ரோனும் பெர்ட்ராண்டும் ஒரு வலதுசாரி திட்டநிரலை நடைமுறைப்படுத்த புதிய மக்கள் முன்னணியின் (NFP) சில பகுதிகளின் ஆதரவைச் சார்ந்திருக்க முடியும் என்று தெளிவாக எதிர்பார்க்கின்றனர். மொத்தத்தில், அவர்களது இரண்டு கட்சிகளும் பாராளுமன்றத்தின் 577 இடங்களில் 146 இடங்களை மட்டுமே கொண்டுள்ளன. இது பெரும்பான்மைக்கு தேவையான 289 இடங்களை விட மிகக் குறைவாகும். ஆகவே பெர்ட்ராண்ட் இப்போது தேர்தல்களில் NFP ஐ ஆதரித்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன் மட்டுமல்ல, மாறாக முதலாளித்துவ சோசலிஸ்ட் கட்சி (PS), ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மற்றும் பசுமைக் கட்சியினர் போன்ற NFP இன் கூட்டிலுள்ள மெலோன்சோனுடன் இணைந்த கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

NFP இன் மலட்டுத்தன்மை, அதன் கூட்டணியிலுள்ள முன்னணி சக்தியான மெலோன்சோனுடைய அடிபணியாத பிரான்ஸ் (LFI) கட்சியின் முற்றிலும் குட்டி-முதலாளித்துவ குணாம்சத்தை அம்பலப்படுத்திக் காட்டுகிறது. அனைத்திற்கும் மேலாக, NFP க்கு அப்பால், தொழிலாளர்களுக்கான ஒரு முன்னோக்கிய பாதையாக அதனை ஊக்குவித்த தொழிலாளர் போராட்டக் கட்சி (LO) அல்லது Révolution permanente (RP) மொரேனோவாத போக்கு போன்ற ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து ஓடிய நடுத்தர வர்க்க வாரிசுகளின் ஒட்டுமொத்த அடுக்கும் தற்போது அம்பலப்பட்டு நிற்கிறது.

மக்களுக்கு எதிராக ஆட்சி புரிவதற்காக வெறுக்கப்பட்டுவரும் “செல்வந்தர்களின் ஜனாதிபதி” மக்ரோன், நிதி மூலதனத்தால் கோரப்படும் கொள்கைகளை அமல்படுத்தி வருவதோடு, சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் நிராகரிக்கப்படுகிறார். அதிர்ச்சியூட்டும் வகையில் 91 சதவீத அமெரிக்கர்களும் மேற்கு ஐரோப்பியர்களில் 89 சதவீதத்தினரும் ரஷ்யா மீது போர் தொடுக்க உக்ரேனுக்கு நேட்டோ துருப்புகளை அனுப்புவதை எதிர்க்கின்றனர். இது அணுஆயுத போராக தீவிரமடைய அச்சுறுத்துகிறது. இதேபோல, போருக்கு நிதியாதாரத்தை திரட்டுவதற்காக, பாரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள நிலையில், பிரெஞ்சு மக்களில் 91 சதவீதத்தினர் ஒரு வாக்கெடுப்பும் இல்லாமல் கடந்த ஆண்டு மக்ரோன் உத்தரவிட்ட ஓய்வூதிய வெட்டுக்களை எதிர்க்கின்றனர்.

ஜூலை 7 வாக்களிப்பின் முடிவானது, நவ-பாசிசவாத தேசிய பேரணி (RN) கட்சி மற்றும் மக்ரோன் இரண்டினதும் வெளிநாட்டவர் விரோத, முஸ்லீம்-விரோத மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகளுக்கு பிரான்சில் நிலவும் பரந்த எதிர்ப்பையும், அத்துடன் காஸாவில் இஸ்ரேலிய ஆட்சியின் இனப்படுகொலைக்கு ஆழமாக வேரூன்றிய எதிர்ப்பையும் எடுத்துக்காட்டியது. எவ்வாறெனினும், புதிய மக்கள் முன்னணி இந்த அரசியல் வாய்ப்பை வீணடித்து, துரிதமாக ஒரு தேர்தல் கூட்டணியை அமைத்தது.

புதிய மக்கள் முன்னணியும் அதன் துணைஅமைப்புக்களும் தொழிலாள வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக கிரீஸில் சிரிசா, ஸ்பெயினில் பொடெமோஸ் அல்லது ஜேர்மனியில் இடது கட்சி போன்ற ஐரோப்பா முழுவதிலுமான கூட்டணி கட்சிகளைப் போலவே, கல்வித்துறை, தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அரசியல்-ஊடக ஸ்தாபகத்தில் உள்ள நடுத்தர வர்க்கத்தின் வசதியான அடுக்குகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. முதலாளித்துவ அரசு இயந்திரம் மற்றும் ஆளும் வர்க்கத்துடன் பிணைக்கப்பட்டுள்ள அவைகள், பாலின மற்றும் இன அடையாள அரசியலின் அடிப்படையில், ஒரு தேசிய கட்டமைப்பிற்குள் நடைமுறைவாத சூழ்ச்சிகளைப் பின்தொடர்கின்றன.

மக்ரோனுக்கு எதிரான பெருவாரியான தொழிலாள வர்க்க எதிர்ப்பின் தலைமையில் NFP தன்னைத்தானே இருத்திக் கொள்ள முடியாது, ஏனென்றால் அது அவர்களை துரிதமாக அவர்கள் செல்ல விரும்புவதைக் காட்டிலும் மிக அதிகமாக இடதிற்கு இட்டுச் செல்லும். உண்மையில், PS உடன் LFI உடன்பட்ட NFP தேர்தல் வேலைத்திட்டமானது பிரெஞ்சு துருப்புக்களை உக்ரேனுக்கு அமைதி காக்கும் படையினராக அனுப்பவும், பிரெஞ்சு உளவுத்துறை மற்றும் இராணுவ பொலிஸை உள்நாட்டில் பலப்படுத்தவும் அழைப்பு விடுத்தது. எனவே மக்ரோனுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் இயக்கம் அதன் சொந்தக் கொள்கைகளுக்கு எதிராக இயக்கப்படும் என்று NFP அஞ்சுகிறது.

அதற்கு பதிலாக, காஸ்டெட்ஸ் தனது பாலியல் நோக்குநிலையின் அடிப்படையில் தன்னை விளம்பரப்படுத்துகிறார். இந்த வாரம், அவர் வாழ்க்கை பாணி முறை இதழான பாரிஸ் மேட்ச் (Paris Match) க்கு அளித்த ஒரு நேர்காணலில், “தலைநகரின் 8 பில்லியன் யூரோக்கள் கடனுக்கு சேவை வழங்குவதை மேற்பார்வையிடும் பாரீஸ் தொழில்நுட்ப வல்லுநர்” என்பதற்கும் கூடுதலாக, அவர் ஒரு மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒரு ஓரினச்சேர்க்கையாளரும் ஆவார் என்பதை வெளிப்படுத்தினார். “நான் யார் என்று சொல்ல விரும்புகிறேன்” என்று அவர் கருத்து தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், NFP இன் அரசியல் அடையாளத்தில் உள்ள தீர்க்கமான பிரச்சினை என்னவென்றால், அது சோசலிசத்தை எதிர்க்கிறது மற்றும் போர், இனப்படுகொலை மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதை தடுக்கிறது என்பதாகும். தொழிலாளர்களும் இளைஞர்களும் முகங்கொடுக்கும் எரியும் கேள்வி, அதன் எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தை அம்பலப்படுத்துவதில் இருந்து என்ன அரசியல் முடிவுகளை எடுப்பது என்பதாகும்.

ஜூலை 7 தேர்தல்களில் இருந்து இறுதியாக எந்த அரசாங்கம் வெளிப்பட்டாலும் தொழிலாள வர்க்கத்திற்கும், அரசாங்கத்துக்கும் இடையே ஒரு வெடிப்பார்ந்த மோதல் வெளிப்படும். எவ்வாறெனினும், NFP உடன் இணைந்துள்ள தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கட்டுப்பாட்டின் கீழ் தொழிலாளர்களால் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. இதற்கு, வேலையிடங்கள், பள்ளிகள் மற்றும் தொழிலாள வர்க்க பகுதிகளில் போராட்டத்திற்கான சுயாதீனமான அமைப்புகளைக் கட்டியெழுப்புவது அவசியமாகும், அவைகள் தொழிலாளர்கள் மத்தியிலான பரந்த சமூக எதிர்ப்பை அணிதிரட்டவும் மற்றும் அதை உலகெங்கிலுமான அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளின் அபிவிருத்தி செய்யும் போராட்டங்களுடன் இணைக்கவும் முடியும்.

ஆகவே இதிலிருந்து பிரிக்க முடியாதது, ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் NFP இன் ஜனரஞ்சகவாத சக்திகளால் முன்வைக்கப்படும் அரசியல் தடையை தகர்க்க தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை ஆகும். ஒரேயொரு கட்சி மட்டுமே மெலோன்சோன் மற்றும் NFP இன் பிற்போக்குத்தனமான பாத்திரம் குறித்து எச்சரித்தது. இன்று கட்டியெழுப்பப்பட வேண்டிய அந்தக் கட்சி, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste-PES) ஆகும்.

Loading