மஹ்தி பிளேபெல்லின் அறியப்படாத ஒரு நிலத்திற்கு: பாலும் தேனும் நிறைந்த நிலத்தைத் தேடி "சிறையிலிருந்து" தப்பினர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

பாலஸ்தீனிய-டேனிஷ் எழுத்தாளரும் இயக்குனருமான மஹ்தி பிளீபெல் (Mahdi Fleifel) இயக்கிய அறியப்படாத ஒரு நிலத்திற்கு (To a Land Unknown), என்ற திரைப்படமானது, இந்த ஆண்டு வெளிவந்த முக்கியமான திரைப் படங்களில் ஒன்றாக இருக்கிறது.

வியக்கத்தக்க வகையில், காஸாவில் இஸ்ரேலிய அழிப்புப் போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில், இத்திரைப்படம், படமாக்கப்பட்டு, திருத்தப்பட்டு, மே மாதம் பிரான்சின் கேன்ஸ் திரைப்பட விழாவில் (Cannes Film Festival) முதல் காட்சியாகக் திரையிடப்பட்டது.

ரெடா (Reda) மற்றும் சத்திலா (Chatila) [Photo]

பிளீபெல் (Fleifel) இன் புனைகதையைக் கொண்ட இத்திரைப்படமானது, இரண்டு ஆவணமற்ற பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அகதிகளாகவும் மற்றும் உறவினர்களாகவும் இருக்கும் ரெடா மற்றும் சத்திலா ஆகியோரைப் பின்தொடர்கிறது. அவர்கள் ஏதென்ஸில் தங்களைக் கண்டுபிடித்து ஜேர்மனியை அடைந்து அங்கு ஒரு உணவகத்தைத் திறக்க விரும்பி தீவிர முயற்சிகளை மேற்கொள்கின்றனர். மோசமான நிலைமைகளில் இருந்து தப்பிக்க அவர்கள் முயற்சிக்கும் போது, ​​அவர்கள் கீழ்த்தரமான மற்றும் மிருகத்தனமான முறைகளை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். அவர்களின் அத்தகைய செயல்களுக்கு ஒரு விலை கொடுக்க வேண்டியிருந்தது.

அறியப்படாத ஒரு நிலத்திற்கு திரைப்படம், உடனடி அரசியல் அல்லது இராணுவ சூழ்நிலைகளையோ அல்லது காஸாவின் நிலைமைகளையோ குறிப்பிடவில்லை என்றாலும், பாலஸ்தீனியர்களின் அவலநிலையை திரைமொழியாக்கியுள்ளது. அது கேன்ஸ் (Cannes) திரைப்பட விழாவில், அத்தகைய சக்திவாய்ந்த பிரபலமான மற்றும் விமர்சன ரீதியான பதிலை உருவாக்குவதில் நிச்சயமாக ஒரு பங்கைக் ஏற்படுத்தியிருந்தது.

ஒரு ஊடகம் விளக்கியது போல், இத்திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது, கூட்டத்தினர் எழுந்து நின்று ஒன்பது நிமிடங்கள் கைதட்டியது மட்டுமல்லாமல், திரையரங்கில் அவர்கள் பாலஸ்தீனத்திற்கு தமது ஆதரவைக் காட்ட ‘விடுதலை, பாலஸ்தீனத்திற்கு சுதந்திரம்!’ என்ற முழக்கங்களையும் எழுப்பினர்.

இந்த திரைப்படத்தை அறிமுகப்படுத்துகையில், இயக்குனர் பிளீபெல் இவ்வாறு குறிப்பிட்டார்

இந்த நம்பமுடியாத காலங்களில், கேன்ஸில் ஒரு பாலஸ்தீனிய திரைப்படத்தை திரையிடுவதற்கு என்னிடம் குறிப்பாக ஒரு வேகம் இருந்துகொண்டிருந்தது. பாலஸ்தீனியர்களாக, நாங்கள் ஓரே மாதிரியான ஊடகங்களுக்கு சவால் விடுகிறோம், ஆனால் மிக முக்கியமாக, கண்ணுக்குத் தெரியாததை நாங்கள் மீறுகிறோம், இது ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் எதிர்கொண்டுவரும் போராட்டமாகும். முன்னெப்போதையும் விட இப்போது நம் கதைகள் தேவைப்படுகின்றன.

ஆகஸ்ட் மாதம் நியூசிலாந்து மற்றும் மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாக்கள் உட்பட 50 திரைப்பட விழாக்களில் இத்திரைப்படத்தை திரையிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்காவில் இத் திரைப்படம் திரையிடப்படும்போது, ​​இந்தக் கருத்தையும் இயக்குநர் பிளேபெல் உடனான நேர்காணலையும் மீண்டும் வெளியிடுவோம் என்று ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளார்கள்.

அறியப்படாத ஒரு நிலத்திற்கு [Photo]

காஸாவில் இஸ்ரேலிய குற்றங்கள் படத்தின் வெற்றிக்கு முதன்மையான காரணம் என்று இவை எதுவும் கூறவில்லை. இவை வெகு தொலைவில் இருக்கின்றன. இத்திரைப்படம், ஒரு தீவிரமான, புத்திசாலித்தனமான கலைப் படைப்பாகும். எவ்வாறாயினும், அறியப்படாத ஒரு நிலத்திற்கு சமகால நிகழ்வுகளிலிருந்து சக்தியையும் முக்கியத்துவத்தையும் பெற முடியும். ஏனெனில் வறுமை, சமூக சமத்துவமின்மை, புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்கள், போர், ஏகாதிபத்திய ஒடுக்குமுறை மற்றும் ஏராளமான மக்களின் வாழ்வில் அவற்றின் தவிர்க்க முடியாத, அன்றாட விளைவுகள் என இது ஏற்கனவே நம் காலத்தின் பெரிய கேள்விகளை நோக்கியதாக இருக்கிறது.

பிளேபெல்லின் திரைப்படத்தில், குறிப்பிட்டுள்ளபடி, பாலஸ்தீனிய அகதிகளான சத்திலா (Mahmoud Bakri) மற்றும் ரெடா (Aram Sabbah) ஆகியோர் ஏதென்ஸில் சிக்கித் தவிக்கின்றனர். ஆவணங்கள் ஏதுமின்றி, வறுமையில் வாழ்ந்து வருவதுடன், இதர அரேபிய அகதிகளுடன் சேர்ந்து பரிதாபமான இடங்களில் இருக்கிறார்கள். ரெடா ஒரு மாதமாக ஹெராயின் போதைப் பழக்கத்துக்கு உட்பட்டிருந்தார். ஆனால் அவர்களின் ஆசை இன்னும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. ஆரம்பக் காட்சிகளின் ஒன்றில், இருவரும் ஒரு பெண்ணுடைய பர்சைத் திருடிக்கொண்டு ஒடுகிறார்கள், அதில் அவள் ஐந்து யூரோக்களை மட்டுமே வைத்திருப்பதை வெறுப்புடன் பார்த்து அவளும் ஏழையாகத்தான் இருக்கிறாள் என்பதை அவர்கள் தெரிந்துகொள்கிறார்கள்.

கடவுச்சீட்டுகள், விமான டிக்கெட்டுகள் மற்றும் அவர்களுக்கு முக்கிய தேவையான பொருட்கள், இருந்தால்தான் அவர்கள் ஜேர்மனிக்கு செல்லலாம். “ஜேர்மனி கிரேக்கத்தைப் போன்றது அல்ல.” ஆனால் போலி கடவுச்சீட்டுகளை பெற கடுமையாக பணத்தை இழக்கவேண்டும். சத்திலாவும், ரெடாவும் தப்பி வெளியேறிய லெபனானில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த அவரது மனைவி நபிலா மற்றும் மகனுடன் சத்திலா செல்போனில் பேசுகிறார்.

நீங்கள் ஏன் லெபனானை விட்டு வெளியேறினீர்கள்? சத்திலாவிடம் ஒரு கட்டத்தில் கேட்கப்படுகிறது. “லெபனான் எங்கள் நாடு அல்ல,” அது காஸாவைப் போல “சிறை போன்றது” என்று அவர் கூறுகிறார். அவரது உறவினர்களின் தற்போதைய இருப்பிடத்தைப் பொறுத்தவரை, “கிரேக்கரைப் பாருங்கள், அவர்கள் அரேபியர்களைப் போல் இருக்கிறார்கள்” என்று அவர் ஏளனமாக குறிப்பிடுகிறார்.

இன்னொரு கொள்ளை நடக்கிறது. சட்டிலா மறைத்து வைத்திருக்கும் பணம் கானாமல் போகிறது. அதை போதைப் பொருள் வாங்க ரெடா எடுத்துள்ளார். சத்திலா கோபமடைந்தார். அதன்
குற்ற உணர்ச்சியில், ரெடா பணம் அல்லது அதன் ஒரு பகுதியை மீட்டெடுக்க விபச்சாரத்தில் ஈடுபடுகிறார். ரெடாவின் தாயுடன் சத்திலா தொலைபேசியில் பேசுகிறார், மேலும் அவருடைய மகன் போதைப் பொருள் பழக்கத்திலிருந்து திருந்தி விட்டதாகப் பொய் சொல்கிறார். “நீங்கள் அவரை கவனித்துக்கொள்வதாக எனக்கு சத்தியம் செய்யுங்கள்” என்று அவள் கெஞ்சுகிறாள்.

டாட்டியானா மற்றும் சத்திலா [Photo]

அவர்கள் 13 வயது சிறுவன் மாலிக்கை (Mohammad Alsurafa) இத்தாலிக்கு கடத்திச் சென்று, ஒரு உறவினருடன் சேர்த்துவிடுவதன் மூலம், அவர்கள் கொஞ்சம் பணத்தை சம்பாதிக்க திட்டமிடுகின்றனர். ஆனால், அதற்கு அம்மாவின் பாத்திரத்தில் நடிக்க அவர்களுக்கு ஒரு “மரியாதைக்குரிய பெண்” தேவைப்படுகிறாள். சத்திலா ஒரு பூங்காவில் யாரோ ஒரு பெண்ணை சந்திக்கின்றார், ஆரம்பத்தில் நிராகரித்த அந்தப் பெண் டாட்டியானா (Angeliki Papoulia) பின்பு அதைச் செய்வதற்கு ஏற்றுக்கொள்கிறாள். இருப்பினும், அவரும் ரெடாவும், மாலிக் இத்தாலிக்கு வருவதற்கு உதவ விரும்புகிறார்கள் என்ற சத்திலாவின் கூற்றை அவள் நம்பவில்லை. “நீங்கள் இதன்மூலம் எவ்வளவு பணம் சம்பாதிப்பீர்கள்?” என்று அவள் கேட்கிறாள், உடனே அதை விட்டுவிடக் கோருகிறாள்.

அந்த நடவடிக்கைக்கான செயல் அமைக்கப்பட்டவுடன், சத்திலா அவர்களுக்குத் தேவையான அனைத்து பணத்தையும் ஒரேயடியாகப் பெற, இன்னும் லட்சியமான மற்றும் ஆபத்தான “மக்கள் கடத்தல்” திட்டத்தைக் கொண்டு வருகிறார். நிச்சயமாக எண்ணங்கள் திட்டமிட்டபடி நடக்காது.

ரெடா மிகவும் உணர்திறனுடன் அல்லது குறைந்த பட்சம் இரண்டு உறவினர்களை விட எளிதாக சங்கடப்படுகிறார். தன்னை ஓரளவுக்கு ஆறுதல்படுத்திக்கொள்ள, அவர் மனந்திருந்தாத போதைக்கு அடிமையான அபு லவ் (Mouataz Alshaltouh) என்பவருடன் சேர்ந்து போதை மருந்துகளை உட்கொள்கிறார். “சத்திலா, நாங்கள் கெட்டவர்கள்,” என்று ரெடா புலம்புகிறார். அவர்களின் அவநம்பிக்கையான திட்டம் வெளிவருகிறது. அதற்கு சத்திலாவின் பதில் “நாம் இருக்கும் குழப்பத்தைக் காட்டுவதுதான்” என்பதை சுட்டிக் காட்டுவது மட்டுமே. எப்பொழுதும் தன்னை ஆறுதல்படுத்திக் கொள்ள, பாலும் தேனும் இருப்பதாகத் தோன்றும் ஜேர்மனியில் தங்கள் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி ரெடா கனவு காண்கிறான். “கஃபே பற்றி என்னிடம் சொல்லுங்கள்,” அவர் சத்திலாவின் கோரிக்கைக்கு ஆளாகிறார், அவர் “அரபு சுற்றுப்புறத்தில் ஒரு சிறிய கடையின்” படங்களையும் “சமையலறையில் நபீலாவுடன்” போன்ற படங்களையும் வரைகிறார்.

முடிவில், அபு லவ் புகழ்பெற்ற பாலஸ்தீனிய கவிஞர் மஹ்மூத் டார்விஷின் (Mahmoud Darwish) “முகமூடி விழுந்துவிட்டது” என்ற கவிதை வரிகளை மீண்டும் கூறுகிறார். “முகமூடி விழுந்துவிட்டது,” என்று அவர் கவிதை வரிகளை உரக்க கூறுகிறார், “உங்களுக்கு சகோதரர்கள் இல்லை, என் சகோதரரே உங்களுக்கு அரண்மனைகள் இல்லை, தண்ணீர் இல்லை, மருந்து இல்லை, வானம் இல்லை, இரத்தம் இல்லை, பாய்மரம் இல்லை”.

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிற பெரும் வல்லரசுகளால் கூட்டாக நடத்தப்படும் காஸா இனப்படுகொலைக்கு மத்தியில், அரபு முதலாளித்துவ ஆட்சிகளால் முழுமையாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் இந்த வரிகள் புதிய அர்த்தத்தைப் கொடுக்கின்றன. “ஜனநாயக,” “அமைதியான” போர்வைகள் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது, ஏதோ பயங்கரமான, இரத்தக்களரி அதன் இடத்தைப் பிடித்துள்ளது.

அறியப்படாத ஒரு நிலத்திற்கு இறுதிக் காட்சி [Photo]

அறியப்படாத ஒரு நிலத்திற்கு என்ற திரைப்படம் என்பது கூர்மையான பார்வை, உணர்ச்சியற்ற, யதார்த்தமான, துல்லியமான, சில சமயங்களில் நகைச்சுவையை கொண்டிருக்கிறது. இது அழகான படங்களை வரையவில்லை, ஆனால் அது இழிவானதாகவும் இல்லை. சத்திலா, ரேடா, மற்றும் பெரும்பாலானவர்கள் முற்றிலும் ஒழுக்கமானவர்கள், நல்ல எண்ணம் கொண்டவர்கள், இனிமையானவர்கள், மென்மையானவர்கள். முக்கால் நூற்றாண்டு சியோனிச வன்முறை உட்பட பயங்கரமான சூழ்நிலைகள் இந்த பயங்கரமான விளைவுகளை அவர்களுக்கு உருவாக்கியிருக்கின்றன.

திரைப்படத்தின் தீவிர நேர்மையும் நம்பகத்தன்மையும் மறுக்க முடியாதவையாக இருக்கின்றன. இதில், வலிமிகுந்த, வேதனையான பாலஸ்தீனிய அனுபவம் சந்தேகத்திற்கு இடமின்றி செயல்படுகிறது.
அறியப்படாத ஒரு நிலத்திற்கு தன்னை உறுதிப்படுத்துவது போல, அடக்குமுறையை மேன்மைப்படுத்துவது அவசியமில்லை. ஆனால், இத்தகைய கடினமான சூழ்நிலைகளில், ஒரு கலைஞன் வாழ்க்கையையும் போராட்டத்தையும் தீவிரமாக எடுத்துக் கொண்டால், அது கட்டாயமான மற்றும் தவிர்க்கமுடியாத தனிப்பட்ட மற்றும் சமூக நேர்மையின் மீதான பக்தியை ஊக்குவிக்கும். ஒரு பிரபல பிரெஞ்சு நாவலாசிரியரிடம், “ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, நான் நேர்மையாக இருக்க விரும்புகிறேன்” என்று கலைஞன் கூறலாம்.

பாலஸ்தீன அகதிகள் நிலைமையை, பொதுவாக ஆவணமற்ற மற்றும் கைவிடப்பட்டவர்களின் உடல் மற்றும் மனரீதியான இக்கட்டான நிலைகளை இத் திரைப்படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மேலும் இது, சமூக மாற்றத்திற்கு உறுதியளித்த, அழுகிய “இடது” சிரிசா ஆட்சியின் ஒரு பகுதியாக, கிரேக்கத்தின் சமூக அவலத்தின் ஒரு பார்வையை வழங்குகிறது. இந்த ஆட்சியானது, வங்கிகள் மற்றும் பெரிய வணிகங்களுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்திருந்தது.

எவ்வாறாயினும், போதைப்பொருள், தினசரி வன்முறை, விரக்தி, உயிர்வாழ்வதற்கான போராட்டம் போன்ற ஏதென்ஸில் நாம் காணும் நிலைமைகள் எண்ணற்ற மற்ற இடங்களிலிருந்து வேறுபட்டவை அல்ல. இதைத்தான் முதலாளித்துவம் எல்லா இடங்களிலும் மக்கள் மீது திணித்துள்ளது. உத்தியோகபூர்வ சமூகம் தனது கைகளை வீசுகிறது, அல்லது அசல் பாவம் மற்றும் மனித இயல்பின் அழுகலை சுட்டிக்காட்டுகிறது. அதன் சொந்த இலாப பசி, இரக்கமற்ற தன்மை மற்றும் ஊழலுக்கு காரணமான குற்றங்களைக் கணக்கிடுகிறது. இது போன்ற திரைப்படங்கள் சமூக மற்றும் பொருளாதார உறவுகளின் தற்போதைய அமைப்பை நோக்கி, மற்றொரு திசையில் சுட்டிக்காட்டுகின்றன.

அறியப்படாத ஒரு நிலத்திற்கு மற்றும் எங்களுடையது அல்ல உலகம் ( A World Not Ours) ஆகியவற்றில், பிளேபெல் இப்போது இரண்டு குறிப்பிடத்தக்க, முன்னோக்கி செல்லும் சிக்கலான திரைப்படங்களை உருவாக்கியுள்ளார். கூடுதலாக, அவர் செனோஸ் (Xenos) (2014), ஒரு மனிதன் திரும்பினான் (A Man Returned) (2016), ஒரு நீரில் மூழ்கும் மனிதன் (A Drowning Man) (2017) மற்றும் 3 தர்க்க வெளியேற்றங்கள் (3 Logical Exits) (2020) உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க குறும்படங்கள், புனைகதை மற்றும் ஆவணப்படங்களை அவர் இயக்கியுள்ளார். கடந்த பத்து வருடங்களில் இதுபோன்ற அதிக சாதனை படைத்த மற்றொரு திரைப்படத் தயாரிப்பாளரை பற்றி நினைப்பது கடினம்.

Loading